Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சாவூரில் பாம்பு கடித்த சிறுமியின்‌.. உயிரைக் காப்பாற்ற போக்குவரத்து காவலர் செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பாம்பு ஒன்று சிறுமியை கடித்துவிட்டது. இந்த சூழலில் மருத்துவ உதவிக்கு காத்திருக்காமல், தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து - மருத்துவமனையில் வேகமாக தூக்கி சென்று சிறுமியின் உயிரை காப்பாற்றிய போக்குவரத்துக் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில், அதன் அருகில் உள்ள சிவகங்கை பூங்காவில் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

Thanjavur

அங்கு தஞ்சாவூர் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த கவிதா என்பவர் தனது இரு‌ பெண் குழந்தைகளுடன் சிவகங்கை பூங்காவிற்கு வந்துள்ளார். அப்போது அவரது இரண்டாவது மகள் நித்யஸ்ரீ பூங்காவில் விளையாடி கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்ட நிலையில், அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ராஜகண்ணன் தனது இருசக்கர வாகனத்தில் சிறுமியும் அழைத்துக் கொண்டு வேகமாக அருகில் உள்ள அரசு இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் அங்கு சிறுமியை தூக்கி கொண்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளார்.

தொடர்ந்து பூங்காவில் தனியாக நின்றிருந்த மூத்த மகளையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். சிறுமிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். சிறுமியின் உயிரை காப்பாற்ற போராடிய போக்குவரத்து காவலரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

பொதுவாக பாம்புகள் புதர்கள் காட்டுப்பகுதியில் அதிகளவில் காணப்படும். புல் தரைகள் காட்டுப்பகுதியில் சிறுவர், சிறுமிகள் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் ஒருவேளை பாம்பு கடித்தால் அது என்ன பாம்பு என்பதை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அப்படி அடையாளம் கண்டு கொண்டால் எளிதாக சிகிச்சை அளிக்க முடியும். எல்லா பாம்பும் விஷப்பாம்பு கிடையாது

கட்டுவிரியன் நல்ல பாம்பு சுருட்டை ஏரியன் கண்ணாடிவிரியன் ஆகிய நான்கு பாம்புகளே தமிழ்நாட்டில் உள்ள பெரிய விஷ பாம்புகள் ஆகும். இவ கடித்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும். பதற்றப்படாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதே சிறந்த பலனாக இருக்கும். நாட்டு வைத்தியம் கை வைத்தியம் போன்ற முயற்சிகளை எந்த சூழ்நிலையும் செய்யக்கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+