காதலியை பங்கு போட்ட காதலன்..ஒரத்தநாடே உறைஞ்சு பேச்சே! போதையில் மாறிய பாதை.. இப்போ காலும் போச்சே..!
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முக்கிய குற்றவாளியான பெண்ணின் காதலன் கவிதாசன், போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற போது எலும்பு முறிவு ஏற்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக அந்த பெண் சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அந்த இளம் பெண் கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த தெற்கு கோட்டை பகுதியைச் சேர்ந்த கவிதாசன் அவரை மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அங்கு மறைந்திருந்த கவிதாசனின் நண்பர்களான திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இதனை வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்ணை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த இளம் பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதை அடுத்து பாலியல் வன்கொடுமை, கூட்டு சதி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கவிதாசன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பாலியல் வன்கொடுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கவிதாசனும் அந்த இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இளம்பெண் ஊருக்கு வந்தபோது தனியாக சந்திக்க வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்று கவிதாசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் கத்தி முனையிலும் பீர் பாட்டிலை உடைத்தும் மிரட்டி அந்த இளம் பெண்ணை நான்கு பேரும் பாலியல் வன்கொடுமை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட கவிதாசன் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வைத்து போலிசார் தனி தனியாக விசாரணை நடத்தினர். அப்போது வழக்கின் முக்கிய குற்றவாளியும், இளம் பெண்ணை காதலித்ததாக கூறப்படும் கவிதாசன் போலீசாரின் பிடியில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் கவிதாசனை துரத்திச் சென்ற நிலையில், தடுமாறி விழுந்துள்ளான்.
அப்போது அவனுக்கு இடது காலில் பலமாக எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவனை பிடித்த போலீசார் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து எக்ஸ்ரே மூலம் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் மாவுக் கட்டு போட்டனர். தொடர்ந்து மருத்துவமனையிலேயே போலீசார் கவிதாசனுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் கவிதாசனை சிலர் தாக்கலாம் என தகவல் பரவியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications