தஞ்சையில் காலையிலேயே கொடூரம்.. அரசுப் பள்ளி ஆசிரியை வெட்டிக்கொலை.. இளைஞர் கைது! காதல் பிரச்சினையா?

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சையில் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வரும் காவ்யா என்பவர் அஜித்குமார் என்ற இளைஞரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். காலையிலேயே நடந்த கொடூர சம்பவம் தஞ்சை பகுதியை உலுக்கியுள்ளது. காதல் பிரச்சினையால் இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று தஞ்சையில் பள்ளி ஆசிரியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

thanjavur-government-school-teacher-murdered-suspect-ajith-kumar-arrested

பள்ளி ஆசிரியை காவ்யா

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருபவர் காவ்யா. இவரும் அஜித்குமார் என்ற இளைஞரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், காவ்யாவுக்கு வேறு ஒரு இடத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த அஜித்குமார் இன்று காலை, வழக்கம் போல அரசு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை காவ்யாவை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து காவ்யாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

போலீஸ் நிலையத்தில் சரண்

இந்த படுகொலை சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், காவ்யா உடலை கைப்பற்றி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆசிரியையை வெட்டிக் கொலை செய்த அஜித் குமார் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். தஞ்சையில் அரசு பள்ளி ஆசிரியையை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை; யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் படுகொலை செய்யப்படலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அந்தக் குற்றச்சாட்டு உண்மை என்பது ஆசிரியை காவியா படுகொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் உறுதியாகியிருக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

இதே தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி என்ற ஆசிரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி மதன் என்பவரால் பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறைகளை சகித்துக் கொள்ள முடியாது என்று மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் வீராவேசம் காட்டினார்கள்.

சரியாக ஒரு ஆண்டு கழித்து

ஆனால், சரியாக ஓராண்டு கழித்து தஞ்சாவூரில் இன்னொரு ஆசிரியை படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதை தடுக்க திமுக அரசால் முடியவில்லை. தமிழ்நாட்டில் படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 படுகொலைகள் நடக்கின்றன. பெண்களும், குழந்தைகளும் வெளியில் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. ஆட்சியில் இருக்கப் போகும் இன்னும் சில நாள்களுக்காவது தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+