தஞ்சாவூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: முதலிடத்தில் முரசொலி! மூன்றாவது இடத்தில் பாஜக
தஞ்சாவூர்: தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் திமுகவின் முரசொலி, பாஜகவின் கருப்பு முருகானந்தம் ஆகியோர் களத்தில் முக்கிய வேட்பாளராக கருதப்படுகின்றனர். பிற்பகல் நிலவரப்படி முரசொலி முன்னிலையில் இருக்கிறார். கருப்பு முருகானந்தம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் முரசொலி (திமுக) கருப்பு முருகானந்தம் (பாகஜ) சிவனேசன் (தேமுதிக) ஹுமாயூன் கபீர் (நாம் தமிழர் கட்சி) உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.

கடந்த 1952ல் தொடங்கி 2019 வரை, 19 லோக்சபா தேர்தல்கள் இந்த தொகுதியில் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் 9 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் அதிக வெற்றிகளை பெற்ற கட்சியும் இதுதான். இதனை தொடர்ந்து திமுக 8 முறை இந்த தொகுதியில் வென்றிருக்கிறது. இது தவிர அதிமுக 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வென்றிருக்கிறது.
பாரம்பரியமான திமுக குடும்பத்தை சேர்ந்த முரசொலி தஞ்சை லோக்சபா தொகுதிக்கு புதுமுகமாவார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் கருப்பு முருகானந்தமும், தேமுதிக சார்பில் சிவனேசனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஹுமாயூன் கபீர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
தஞ்சையில் திமுகவுக்கான அபரிதமான செல்வாக்கை கடந்த தேர்தல்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. இம்முறை அதிமுக, பாமக போன்ற கட்சிகள் போட்டியிடாமல் பாஜக, தேமுதிக களம் காண்பதும் திமுக வேட்பாளருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.
தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுகவின் முரசொலி 2,58,031 வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் இருக்கும் தேமுதிகாவின் சிவனேசன், 1,62,622 வாக்குகள் குறைவாக 95,409 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். மூன்றாவது இடத்தில் 87,568 வாக்குகளுடன் பாஜகவின் முருகானந்தம் இருக்கிறார்.
முந்தைய தேர்தல் முடிவுகள்:
தஞ்சாவூர் லோக்சபா தொகுதி தேர்தல்களில் காங்கிரஸ்தான் அதிக முறை வென்றிருக்கிறது. 9 முறை காங்கிரஸ், 8 முறை திமுக, 2 முறை அதிமுக வென்ற தொகுதி தஞ்சாவூர். திமுகவின் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், காங்கிரசின் எஸ். சிங்காரவடிவேல், துளி வாண்டையார் ஆகியோர் வென்ற தொகுதி இது.
1952 தொடங்கி 1991 வரை நடைபெற்ற 12 தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. 4 முறை சிங்காரவடிவேலுவும், ஒருமுறை துளசி வாண்டையாாரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இடையில் 1967 மற்றும் 1971 லோக்சபா தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.
2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக) - 4,00,986
தங்கமுத்து (அதிமுக) - 2,81,838
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் ( திமுக) 4,08,343
துறை பாலகிருஷ்ணன் (மதிமுக)3,06,556
டாக்டர் ராமநாதன் (தேமுதிக)63,852
முருகராஜ் (சுயேட்சை) 9,805
சரவணன் (பகுஜன் சமாஜ் கட்சி) 5,811
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
பரசுராமன்(அதிமுக) 5,10,307
டி.ஆர்.பாலு(திமுக) 3,66,188
கருப்பு முருகானந்தம்(பாஜக) 58,521
கிருஷ்ணசாமி வாண்டையார்(காங்கிரஸ்) 30,232
தமிழ்செல்வி(சிபிஎம்) 23,215
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்
எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்(திமுக) 5,88,978
என்.ஆர்.நடராஜன்(தமாக) 2,20,849
முருகேசன்(சுயேட்சை) 1,02,871
மருதராஜா(நாம் தமிழர் கட்சி) 57,924
ஆர். செல்வராஜ்(சுயேட்சை) 28,274
சம்பத் ராமதாஸ்(மக்கள் நீதி மய்யம்) 23,477
ஆர்.ஸ்டாலின் (பகுஜன் சமாஜ் கட்சி) 5,856


Click it and Unblock the Notifications
