தஞ்சை அருகே காலையில் நண்பர்களுடன் சந்தோஷமாக சென்ற இளைஞர்.. கடைசியில் இப்படியா ஆகணும்
தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த 22 வயதாகும் நபில் என்ற இளைஞர், அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜா மடம் அக்னி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான அப்துல் ரஷீத், சித்திக் முகமது, இம்ரான், அப்துல் ரபீக் ஆகிய 4 நண்பர்களுடன் சென்று காலையில் குளித்துள்ளார். அப்போது தான் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது.
காவிரி டெல்டாவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் எல்லையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பில்லிக்குண்டுவில் தொடங்கி, கடைசியில் கடலில் கலக்கும் இடமான மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் வரை காவிரி நீர் தற்போது கரைபுரண்டு ஓடுகிறது. கடலில் வேகமாக சென்று கலந்து வருகிறது. பல டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வருகிறது.

ஆற்றில் குளிக்க கால் வைத்தால் இழுத்துக்கொண்டு சென்று விடும். அந்த அளவிற்கு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. கிளை ஆறுகளிலும், கால்வாய்களிலும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. அந்த வகையில் அக்னி ஆற்றிலும் தண்ணீர் அதிகமாக உள்ளது இந்த ஆற்றில் குளித்த இளைஞர் இன்று உயிருடன் இல்லை.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியான பழஞ்செட்டி தெரு பகுதியைச் சேர்ந்தவர் நைனா முகமது இவரது மகன் நபில் வயது 22 .இவர் இன்று காலை 8 மணி அளவில் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜா மடம் அக்னி ஆற்றில் குளிப்பதற்காக அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஷீத், சித்திக் முகமது, இம்ரான், அப்துல் ரபீக் ஆகிய 4 நண்பர்களுடன் சென்று அக்னி ஆற்றில் குளித்துள்ளார்.
அப்போது ஆற்றின் நடுவில் குளித்துக் கொண்டிருந்த நபி திடீரென மாயமானார். இதில் அதிர்ச்சடைந்த அவரது நண்பர்கள் நீண்ட நேரம் தேடிப் பார்த்தும் நபியை காணாததை அடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த அதிராம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் துணையுடன் நபியைத் தேடி வந்தனர். இந்த நிலையில் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு இறந்த நிலையில் நபியின் உடல் கண்டெடுக்கப்பட்டு படகுமூலம் ஏற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும் காலம் என்பதால் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள கால்வாய்களில் தண்ணீர் அதிகம் செல்கிறது. எனவே தயவு செய்து யாரும் ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications