இத்துனூண்டு மாஸ்க்.... அபராதமா? நானும் ரவுடிதான்- தஞ்சை போலீசாருடன் மோதிய இளம் பெண்- வைரலான வீடியோ
தஞ்சாவூர்: மாஸ்க் அணிய மறுத்து போலீசாருடன் தஞ்சாவூரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மல்லுக்கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர்

தஞ்சை இளம் பெண்
இந்த நிலையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முக கவசம் அணியாமல் வந்த பெண்ணை நிறுத்தி 200 ரூபாய் அபராதம் கட்டுமாறு போலீசார் கூறியுள்ளனர்

இத்துனூண்டு மாஸ்குக்கு...
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், போலீசாரைப் பார்த்து இத்துனூண்டு மாஸ்குக்கு 200 ரூபாய் கட்ட சொல்றீங்களே...உனக்கு அசிங்கமா இல்லையா என கேள்வி கேட்டார். அந்த பெண்ணுக்கு திரும்ப பதில் கூறிய போலீசார், கலெக்டரை போய் கேளுமா என்றார்.

ஆட்சியரை விமர்சித்த பெண்
அதற்கும் அசராத அந்த பெண், யோவ் கலெக்டரை கூப்பிடு... அவன நானே கேட்கிறேன்....மானத்தை வாங்கி விடுவேன் எவனாயிருந்தாலும் என முகத்தில் போட்டு இருந்த கண் கண்ணாடியை கழட்டி ஆவேசமாக பேசியதை பணியில் இருந்த சக போலீசார் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

நானும் ரவுடிதான்
அவரிடம் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் போடுறியா போடு ஒரு மயிரும் புடுங்க முடியாது என தெனாவட்டாக பேசி தோளில் போட்டிருந்த ஷாலை இழுத்து விட்டு கொண்டு நானும் ரவுடிதான் என கூறி மிரட்டினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications