மனைவி கொலை செய்து போலீசுக்காக வெய்ட்டிங் - தஞ்சையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: வேறு ஒருவருடன் இருந்த தொடர்புக் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு காவல்துறையினரின் வரவுக்காக காத்து நின்ற கணவனை கைது செய்துள்ள போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு முகவரியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரும், தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியை சேர்ந்த இந்துமதி என்பவரும், சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

The husband who killed his wife in Thanjavur and waited for the police

இந்த நிலையில் கூலிவேலைக்குச் சென்ற இந்துமதிக்கும், உடன் வேலை பார்த்து வந்த மற்றொரு தொழிலாளிக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செல்லத்துறைக்கு தெரிய வந்ததையடுத்து அவர் கண்டித்துள்ளார்.

ஆனாலும் இதுகுறித்து கண்டு கொள்ளாத இந்துமதி கடந்த தீபாவளி பண்டிகைக்குப் பிறகு , திடீரென வீட்டை விட்டு வெளியேறு தொடர்பில் இருந்த நபருடன் சென்றுள்ளார். பல நாட்கள் தேடுதலுக்கு பிறகு இந்துமதியை கண்டுபிடித்த செல்லதுரை சமாதானம் பேசி தன்னுடன் அழைத்து வந்து வசித்து வந்துள்ளனர். அதன் பின்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, இந்துமதி அவரது சகோதரியின் கணவரான, வேளாங்கண்ணி அருகே குறிச்சி ஊராட்சி ஆய்மழை மேலத்தெரு மெயின்ரோடு சேர்ந்த சங்கர் என்பவரது வீட்டிற்கு நேற்று காலை வந்து தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் செல்லதுரை, நேற்று இரவு ஆய்மழைக்கு வந்து தனது மனைவியுடன் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து இன்று காலை 9 மணி அளவில் தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த செலத்துரை இந்துமதி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் இந்துமதி.

கொலைக்கு பின்பு காவல்துறை வருவதற்காக செல்லத்துரை அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும் செல்லத்துரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+