தஞ்சை பள்ளி மாணவியின் பெற்றோரை சந்தித்து அண்ணாமலை ஆறுதல்.. ரூ.10 லட்சம் நிதியுதவி!
தஞ்சை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , தற்கொலை செய்த தஞ்சை பள்ளி மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இவர் தங்கியிருந்த விடுதியில் வார்டன், அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி தனது மரணப்படுக்கையில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

பாஜக வைக்கும் குற்றச்சாட்டு
வார்டன் சகாயமேரியை (62) ஏற்கனவே போலீஸார் கைது செய்தனர். மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாஜக தனியாக விசாரணை குழு அமைத்துள்ளது. மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணமில்லை என அரசு தரப்பிலும், பள்ளி நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு புகார்
குடும்ப பிரச்சினை காரணமாகவே மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒரு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர். மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்தை வைத்து தமிழகத்தில்பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கின்றனர் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு குற்றம் சாட்டியது.

அண்ணாமலை ஆறுதல்
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் சொந்த ஊரான வடுகபாளையத்தில் உள்ள இல்லத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , பாஜக தேசிய மகளிர் அணித்தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் சென்றிருந்தனர். மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய இருவரும் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார்கள்.

மாணவி படத்துக்கு மரியாதை
பின்னர் மாணவியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது பாஜக மாநிலத் துணை தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜயப்பன் உள்பட ஏராளமான பாஜகவினர் அங்கு இருந்தனர். பாஜக தொண்டர்களும் வீட்டின் முன்பு கூடி இருந்தனர். பின்பு அண்ணாமலையும், வானதி சீனிவாசனும் அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர்.
-
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications