சட்டென காரை நிறுத்தி.. தஞ்சாவூரில் ஸ்டாலினின் சர்பிரைஸ்! உரிமைத் தொகை முகாம் ஊழியர்களுக்கு அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாமுக்கு திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று சர்பிரைஸ் கொடுத்து உள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கும் திட்டம் அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

TN CM MK Stalin went to Urimai thogai camp in Thanjavur

இதனை பெறுவதற்கு தகுதியான குடும்பத் தலைவிகள் யார் என்ற பட்டியலும் வெளியானது. இந்த நிலையில் இதனை செயல்படுத்தும் வகையில், மகளிருக்கான ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 24 ஆம் தேதி தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற "வேளாண் சங்கமம் 2023" மற்றும் 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் பூதலூர் ஒன்றியம், மனையேறிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமிற்கு நேரில் சென்றார்.

அங்கு விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பதிவு செய்த வந்த மகளிரிடம் விண்ணப்பங்களை பதிவு செய்வதில் சிரமங்கள் ஏதாவது இருக்கிறதா, பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உங்கள் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்கிறார்களா என்று முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அதை தொடர்ந்து, முகாமில் பணிபுரியும் பணியாளர்களிடம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் தினசரி எவ்வளவு பதிவு செய்யப்படுகிறது? பதிவு செய்யும் போது தொழில்நுட்ப பிரச்சனைகள் ஏதாவது ஏற்படுகிறதா? விண்ணப்பங்களை பதிவு செய்ய வரும் மகளிர் கேட்கும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களை அளித்து உதவிட வேண்டும் என்றும், விண்ணப்பத்தாரர்களின் விவரங்கள் அடங்கிய பதிவேட்டினை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், விண்ணப்பங்களை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை அடைய வேண்டும் என்றும் முகாமிலுள்ள அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.8.2023 வரையிலும் நடத்தப்படுகிறது.

அதை தொடர்ந்து 2 ஆம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரையிலும் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 850 நியாய அட்டைதாரர்களுக்கும் விலைக்கடைகளிலுள்ள இரண்டாம் 3,72,506 கட்டமாக 333 குடும்ப நியய விலைக்கடைகளிலுள்ள 3,39,264 குடும்ப அட்டைதாரர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+