"உடலுறவு".. 12 வயது சிறுவன் "அப்பா".. 17 வயது சிறுமி "அம்மா".. அப்படியே விக்கித்து நின்ற தஞ்சாவூர்

12 வயது சிறுவன் குழந்தைக்கு அப்பாவான சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: நேற்றில் இருந்து தஞ்சாவூர் போலீசார் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள்.. 17 வயது சிறுமி அம்மாவாகிவிட்டார்.. அதுகூட பிரச்சனையில்லை.. 12 வயது சிறுவன் அப்பாவானது கேள்விப்பட்டு, அந்த ஷாக்கில் இருந்து தஞ்சாவூரே இன்னும் மீண்டு எழவில்லை.

3 வருடத்துக்கு முன்பு தேனியில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த சிறுவனுக்கு 16 வயதுதான்... சென்னையில் ஒரு தொழிற்பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளான்..

டிக்டாக் மீது அதீத மோகம் உடையவன்.. இந்நிலையில், ஒருநாள் திடீரென சிறுவன் மாயமாகிவிட்டான்.. குடும்பத்தினர் எங்கெங்கோ தேடி கிடைக்காமல், போலீசுக்கு போனார்கள்.. போலீஸாரும் கிட்டத்தட்ட 10 மாதங்கள் தேடியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

 ஹைகோர்ட்

ஹைகோர்ட்

அதனால், அந்த அப்பா, சென்னை ஹைகோர்ட்டில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.. அதன்படி, சிறுவனின் செல்போனின் ரகசிய எண்ணை வைத்து தேடியபோது, ஊத்துக்குளியில் அவன் இருப்பது தெரியவந்தது.. உடனே போலீசும், பெற்றோரும் ஊத்துக்குளிக்கு ஓடினார்கள்.. அங்கே போனால் சிறுவன், ஒரு நர்ஸுடன் குடும்பம் நடத்தி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தார்கள்.. அதுமட்டுமல்ல, இவர்களுக்கு 40 நாட்களுக்கு முன்பு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.

 நர்ஸ் காதல்

நர்ஸ் காதல்

டிக்டாக்கில் பழகியபோது நர்ஸ்டன் அறிமுகமாகி, அது காதலாகி, உறவாகி, கடைசியில் ஒரு குழந்தைக்கு அப்பாவாகி நின்றான் அந்த 16 வயது சிறுவன்.. அதற்கு பிறகு அந்த கேஸ் என்னவாயிற்று என்று தெரியவில்லை.. அந்த சிறுவனாவது 16 வயது.. இந்த சிறுவனுக்கு வெறும் 12 வயசுதான்.. தஞ்சாவூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மானோஜிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு கூலி தொழிலாளியின் மகள் அவர்..

 திடீர் சேஞ்ச்

திடீர் சேஞ்ச்

17 வயதாகிறது.. ஸ்கூலுக்கு போகாமல் வீட்டில் இருந்து வருகிறார்... சமீப காலமாகவே இந்த சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளது.. பிறகு திடீரென ஒருநாள் வயிற்று வலி அதிகமாகிவிட்டது.. இதனால் பதறிப்போன பெற்றோர், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மகளை கொண்டு போய் அனுமதித்தனர்... பிறகு டாக்டர்கள் செக் செய்த பார்த்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது, அதுவும் நிறைமாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது..

 நெருக்கம்

நெருக்கம்

பிறகு சிறுமிக்கு பெண் குழந்தையும் பிறந்தது.. இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசாருக்கு டாக்டர்கள் உடனடியாக தகவல் தெரிவித்தனர். போலீசாரும் விரைந்து வந்து சிறுமியிடம் விசாரித்தனர்... அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவன்தான் இதற்கு காரணம் என்றும், தன்னுடன் நெருக்கமாக பழகியதால் கர்ப்பமானதாகவும் சிறுமி சொன்னார்.. இதைக் கேட்டு போலீசார் ஷாக் ஆகிவிட்டனர்.. பிறகு, சிறுமியின் பெற்றோரிடமும், போலீசார் விசாரித்தனர்...

 பிரசவ வலி

பிரசவ வலி

சிறுவனுடன் பழகியது பற்றி தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும், மகள் கர்ப்பமாகி இருப்பது தங்களுக்கே கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் தெரியும், பிரசவ வலி வந்ததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தோம்" என்றும் சொன்னார்கள்.. இதையடுத்து போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட 12 வயது சிறுவனை கைது செய்தனர்... நீதிபதி முன்பு சிறுவனை ஆஜர்படுத்திய போலீசாரிடம், சிறுவனுக்கு மெடிக்கல் செக்கப் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்... இறுதியில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அந்த சிறுவனை அனுப்பி வைத்துள்ளனர்..

 கர்ப்பம்

கர்ப்பம்

உண்மையிலேயே அந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு 12 வயது சிறுவன்தான் காரணமா? இந்த சம்பவத்தில், சிறுவனை தவிர, வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த சம்பவத்தை பெரும்பாலானோரால் நம்பவே முடியவில்லையாம்.. சிறுவனிடம் மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறுமியிடமும் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.. இந்த கலியுகத்தில், இன்னும் என்னவெல்லாம் நாம பார்க்க வேண்டி இருக்கோ?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+