For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்க "ராவான" ரவுடிங்க.. லாரிக்கு வாடகை கேட்ட டிரைவர்.. தகராறு செய்த உரிமையாளர் - ஷாக் வீடியோ

Google Oneindia Tamil News

மயிலாடுதுறை: செங்கோட்டையிலிருந்து மரங்களை ஏற்றிவந்த லாரிக்கு வாடகை கொடுக்காமல் லாரியை கிரேன் கொண்டு மரம் அறுக்கும் ஆலையின் உரிமையாளர் இடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாரி உரிமையாளர் வாடகை கேட்டபோது பணம் தர மறுத்து ஏதேதோ காரணங்களையும் அவர் கூறியுள்ளார். ஆனால் லாரி உரிமையாளர் வாடகையை கராராக கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு எழுந்துள்ளது. இதனையடுத்து மரம் அறுக்கும் ஆலையின் உரிமையாளர் கிரேன் கொண்டு லாரியை இடித்துள்ளார்.

விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! நாளை சீர்காழியில் பள்ளிகள் திறக்கப்படாது - அமைச்சர் மெய்யநாதன் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! நாளை சீர்காழியில் பள்ளிகள் திறக்கப்படாது - அமைச்சர் மெய்யநாதன்

கனமழை

கனமழை

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கனரக வாகன போக்குவரத்து இயல்பை விட சற்று குறைந்துள்ளது. இவ்வாறு இருக்கையில், அதிகனமழை பெய்த மயிலாடுதுறைக்கு பொருட்களை ஏற்றிச் செல்ல லாரி ஓட்டுநர்கள் யாரும் முன்வரவில்லை. ஆனால் ஸ்ரீநிவாசா மரம் அறுக்கும் ஆலைக்கு செங்கோட்டையிலிருந்து மரங்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என லாரி உரிமையாளர் ஒருவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. கனமழை காரணமாகவும், மயிலாடுதுறையில் வெள்ளம் சூழ்ந்துள்ள காரணத்தாலும் லாரி உரிமையாளர் இதனை மறுத்துள்ளார்.

ஸ்ரீநிவாசா மரம் அறுக்கும் ஆலை

ஸ்ரீநிவாசா மரம் அறுக்கும் ஆலை

ஆனால் லாரி உரிமையாளர் கேட்டும் தொகையை தருவதாக மரம் அறுக்கும் ஆலையின் உரிமையாளர் வாக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து செங்கோட்டையிலிருந்து டன் கணக்கில் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி மயிலாடுதுறைக்கு புறப்பட்டுள்ளது. மழை என்பதாலும், போக்குவரத்து பாதிப்பாலும் லாரி சற்று தாமதாக வந்து சேர்ந்திருக்கிறது. இதனையடுத்து லாரியிலிருந்த பொருட்கள் மரம் அறுக்கும் ஆலையில் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் லாரி கிளம்புவதாக கூறிய நிலையில் லாரிக்கான வாடகை பணத்தை ஸ்ரீநிவாசா மரம் அறுக்கும் ஆலையின் உரிமையாளர் வழங்கவில்லை.

தாமதம்

தாமதம்

இன்று இரவு மட்டும் இங்கே தங்குங்கள் நாளை காலை நிச்சயம் பணம் வந்துவிடும் கொடுத்துவிடுகிறேன் என்று முதலில் கூறியுள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த லாரி உரிமையாளர் சரி ஒரு இரவுதானே என லாரியிலேயே தங்கியுள்ளார். ஆனால் மரம் அறுக்கும் ஆலையின் உரிமையாளர் சொல்லியது போல் பணம் கைக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து கேள்வியெழுப்புகையில் இன்னும் ஒருநாள் பொறுத்துக்கொள்ளுமாறு ஆலையின் உரிமையாளர் கூறியுள்ளார். வேறு வழியில்லாமல் இரண்டாவது நாளையும் அங்கேயே கழித்துள்ளார் லாரி உரிமையாளர்.

லாரி உரிமையாளர்கள் சங்கம்

லாரி உரிமையாளர்கள் சங்கம்

மூன்றாவது நாள் இது குறித்து கேட்கையில் அப்போதும் பணம் தாமதமாகும் என சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த லாரி உரிமையாளர் லாரியை மரம் அறுக்கும் ஆலையின் வாசலில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர் பணத்தை கேட்க, மரம் அறுக்கும் ஆலையின் உரிமையாளர் பணம் தர மறுக்க வாக்குவாதம் அடுத்த கட்டத்தை எட்டியது. அதாவது மர ஆலையின் உரிமையாளர் கிரேன் கொண்டு வந்து லாரியை இடித்துள்ளார். இதனை எதிர்பார்க்காத லாரி உரிமையாளர் உடனடியாக மயிலாடுதுறை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார்.

ரவுடி அய்யராக்கும்

ரவுடி அய்யராக்கும்

அங்கு வந்த உரிமையாளர்கள் சம்பவம் குறித்து விசாரித்து, மர ஆலை உரிமையாளரிடம் கராராக பேசி பணத்தை கேட்டனர். பணம் தராவிடில் சங்கத்தின் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இதனையடுத்து மர ஆலை உரிமையாளர் லாரியின் வாடகை பணத்தையும், கிரேன் கொண்டு இடித்ததில் லாரி சேதாரமானதற்கான இழப்பீட்டு தொகையையும் கொடுத்துளார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மர ஆலை உரிமையாளர், "நான் அய்யரிலே ரவுடி அய்யராக்கும்" எனும் பாணியில் நடந்துகொண்டாக கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி லாரி ஓட்டுநர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The incident where the owner of the sawmill, without paying the rent for the lorry which was carrying the trees from Red Fort, demolished the lorry with a crane has caused a great shock. When the lorry owner asked for rent, he refused to pay and gave some reasons. But the lorry owner has asked for the rent as a contract. This led to a verbal dispute between the two. After this, the owner of the sawmill destroyed the truck with a crane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X