பழனியில் நிலத்தகராறில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் படுகாயம்- அதிரவைக்கும் சிசிடிவி லைவ் காட்சிகள்!
பழனி: பழனியில் நிலத் தகராறில் தியேட்டர் உரிமையாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடராஜன் துப்பாக்கிச் சூடு நடத்தும் சிசிடிவி காட்சிகளு வெளியாகி உள்ளன.
Recommended Video
பழனி வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் நடராஜன். அவருக்கும் பழனிச்சாமி, சுப்பிரமணி ஆகியோருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது.

திடீர் துப்பாக்கிச் சூடு
இது தொடர்பான வாக்குவாதத்தின் போது திடீரென தம்மிடம் இருந்து கைத்துப்பாக்கியால் நடராஜன் சுட்டார். இதில் பழனிச்சாமி, சுப்பிரமணி இருவரும் படுகாயம் அடைந்தனர். அப்போது நடராஜனை சுற்றி வளைக்க அப்பகுதியினர் முயன்றனர். ஆனால் அங்கிருந்து நடராஜன் தப்பி ஓடினார்.

இருவர் படுகாயம்
படுகாயம் அடைந்த இருவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது நடராஜனை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிற்து. அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

துப்பாக்கி உரிமம்
இந்த விசாரணையில் நடராஜன் துப்பாக்கி உரிமம் பெற்றிருந்தார். கொரோனா லாக்டவுன் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட உரிமம் நடராஜனுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது தெரியவந்துள்ளது. மேலும் பழனி அரசு மருத்துவமனையில் திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சிசிடிவி லைவ் காட்சி
இதனிடையே நடராஜன் துப்பாக்கிச் சூடு நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் கைத்துப்பாக்கியால் நடராஜன் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார். ஒருவர் அப்படியே சுருண்டு தரையில் விழுகிறார். ஆத்திரம் அடைந்த மற்றொரு நபர் நடராஜனை நோக்கி கட்டையை வீசுகிறார். அங்கிருந்து நடராஜன் தப்பி ஓடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
கும்மிடிப்பூண்டி சிறுமி உடலில் அதிக ரத்தப்போக்கு! மூச்சு பேச்சு இல்லை! ஸ்டான்லி மருத்துவர் விளக்கம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications