தேனியில் 70 கோடி வரி ஏய்ப்பு? போடி திமுக பிரமுகரிடம் அமலாக்கத்துறை துருவி துருவி விசாரணை
தேனி: தேனி மாவட்டம் போடி நகராட்சி தலைவராக ராஜராஜேஸ்வரி என்பவர் இருக்கிறார். இவரது கணவர் சங்கர் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் போடி நகராட்சியில் கவுன்சிலராகவும் இருக்கிறார். நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர் சங்கர் தம்பதி ஏலக்காய் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுடைய வீடு மற்றும் ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3வது நாளாக சோதனை நடத்தினார்கள். அதிகாரிகள் திமுக பிரமுகரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். பல கோடி வரி ஏய்ப்பு நடந்ததாக என விசாரிக்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் போடியை சேர்ந்த சங்கர் ஏலக்காய் வியாபாரி ஆக இருக்கிறார். இவர் தமிழ்நாடு, கேரளாவில் கொள்முதல் செய்யும் ஏலக்காய்களை, இந்த நிறுவனம் மூலம் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். தற்போது ஏலக்காய் மிக மிக நல்ல விலைக்கு செல்கிறது. இதனால் ஏலக்காய் பயிரிட்டவர்கள் பெரும் லாபம் சம்பாதித்து வருகிறார்கள். இந்நிலையில் சங்கர் ஏலக்காய் வியாபாரி மட்டுமல்ல.. தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி நகராட்சி கவுன்சிலராகவும் உள்ளார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி, போடி நகராட்சி தலைவராக இருக்கிறார்.

சங்கர் நடத்தும் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தில் வரிஏய்ப்பு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர்களின் பாதுகாப்புடன் போடிநாயக்கனூரில் முகாமிட்டு, சங்கரின் வீடு மற்றும் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தில் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அவரது மனைவி, மகன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். ஆனால் சங்கர் வெளியூர் சென்றிருந்ததால் அவரிடம் விசாரிக்க முடியவில்லை.
இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக அவரது வீடு, ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது காலை 11 மணி அளவில் ஒரு காரில் சங்கர் தனது வீட்டுக்கு வந்தார். இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவரை காரில் போடி நகர்ப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு வரை இந்த விசாரணை நடந்தது.
சங்கரின் ஏலக்காய் நிறுவனம் மூலம் சுமார் ரூ.70 கோடிக்கு மேல் வரிஏய்ப்பு நடைபெற்று இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். மேலும் இதுதொடர்பாக போடி நகராட்சி கவுன்சிலர் முருகேசன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் போடியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications