நகை ரசீது.. தங்கத்தை அடகு வைத்து திருப்பாதவருக்கு ஜாக்பாட்.. கிடைக்க போகும் 15 லட்சம்
தேனி: தேனியில் பிரின்ஸ் என்பவர் சுமார் 25 பவுன் தங்க நகையை கடந்த 2018-ம் ஆண்டில் அடகு வைத்தார். அவர் அசலும் கட்டவில்லை.. வட்டியை கட்டி திருப்பவில்லை. இந்த சூழலில் ரசீது இல்லாததை காரணம் காட்டி வங்கி ஒரு சிறு தவறு செய்தது. அந்த தவறால் நகையை திருப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நடப்பு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தேனி நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனால் பிரின்ஸ்க்கு 15 லட்சம் ரூபாய் கிடைக்க போகிறது.. எப்படி என்பதை பார்ப்போம்.
நகையை அடகு வைத்தால் அதை சரியான காலக்கட்டத்தில் திருப்பிவிட வேண்டும். மீண்டும் மீண்டும் மறு அடகு வைத்தால், வட்டியாக மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரங்களை கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிலர் நகையை திருப்ப செல்லும் போது, நகையை வங்கிகள் ஏலமே விட்டிருக்கும். 2018 காலக்கட்டத்தில் ஒருவர் நகையை அடகு வைத்திருந்தார்.

25 பவுன் தங்க நகை
அவரால் ரசீது இல்லாத காரணத்தால் நகையை வங்கி நிர்வாகம் திரும்ப தரவில்லை என கூறப்படுகிறது. நகையை திருப்ப தயராக இருந்த போதும், நகையை ரசீது இல்லாத காரணத்தால் மீட்பதற்கு வங்கி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.இதனால் 25 பவுன் நகையை பிரின்ஸ் பறிகொடுத்தார். அவருக்கு தற்போதைய சந்தை மதிப்பில் பாதி தொகையை இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்
நகை அடகு
தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பிரின்ஸ் என்பவர் தனது 199 கிராம் (24.8 பவுன்) நகைகளை தேனி மதுரை சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு அடகு வைத்திருக்கிறார். அதற்கு ரூ.3 லட்சம் நகைக்கடன் பெற்றார். அந்த நகைக்கடனை வட்டியுடன் திருப்பிக் செலுத்தி நகையை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும் என்று வங்கி நிர்வாகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
நகை ரசீது தொலைந்தது
இதையடுத்து பிரின்ஸ் வங்கியை தொடர்பு கொண்டு, தனது அடகு வைத்த ரசீது தொலைந்து விட்டதாகவும், நகைக்கடனுக்கான அசலையும், வட்டியையும் திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறாராம். பின்னர் இது தொடர்பாக குறிப்பிட்ட வங்கி நிர்வாகத்திடம் வக்கீல் மூலம் உறுதிமொழி பத்திரமும் தாக்கல் செய்திருக்கிறார். அதன்பிறகும் வங்கி நிர்வாகம் அவரது தங்க நகையை திருப்பிக் கொடுக்கவில்லை. வங்கி அதிகாரிகளுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு
இதையடுத்து நகையை மீட்க முடியாமல் போன பிரின்ஸ், தேனியை சேர்ந்த வக்கீல் அனந்தசயனன் மூலமாக தேனி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் மனு தாக்கல் செய்தார். அதில், வங்கியின் கிளை மேலாளர், மண்டல உதவி பொதுமேலாளர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்தனர். இந்த மனுவின் மீது தேனி நுகர்வோர் நீதிபதி சுந்தர், உறுப்பினர் சவுந்திரராஜன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது.
15 லட்சம் இழப்பீடு
விசாரணை முடிவில், மனுதாரருக்கு குறிப்பிட்ட வங்கி நிர்வாகம், அவர் அடகு வைத்த 199 கிராம் நகைகளின் தற்போதைய சந்தை நிலவரப்படி (1 கிராம் 8,710) அதன் மதிப்பானது ரூ.17 லட்சத்து 33 ஆயிரத்து 290. அதில், நகைக்கடன் மற்றும் அதற்கான வட்டி ரூ.3 லட்சத்து 31 ஆயிரத்து 372-ஐ கழித்துவிட்டு பாக்கி தொகை ரூ.14 லட்சத்து ஆயிரத்து 918-ஐ ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும் சேவை குறைபாட்டுக்கு ரூ.30 ஆயிரம், முறையற்ற வணிகத்துக்கு ரூ.30 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.90 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். வழக்குச் செலவுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தேனி நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications