ஜெயலலிதா இருந்த வரை 'தேனி' திமுகவால் கனவிலும் நெருங்க முடியாத கோட்டை.. இன்று பரிதாப நிலை
தேனி: எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் தேனி தொகுதியை பொறுத்தவரை திமுகவால் கனவிலும் நெருங்க முடியாத கோட்டையாக இருந்தது. திமுக கடந்த 28 வருடங்களாக வெற்றி பெற ஏங்கி தொகுதி என்றால் தேனி லோக்சபா தொகுதிதான் . இப்போது முன்னிலை வகிக்கிறது. இங்கு அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகளை மூன்று பக்கமும் அரண் போல் அமைத்து அமைந்துள்ள தேனி லோக்சபா தொகுதி என்பது பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாகும். இங்கு கடைசியாக 1996ம் ஆண்டு தான் திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது . அதற்கு முன்பு 1980ல் மட்டுமே திமுக வென்றிருந்தது.

இதனால் திமுக இந்த தொகுதியை எப்போதுமே கூட்டணிக்கு தந்துவிடும் வழக்கத்தை வைத்திருக்கிறது.. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் தந்துவிடும்.. காங்கிரஸ் கட்சி தான் இங்கு 2004, 2009ம் ஆண்டு வெற்றி பெற்றது. 2014, 2019களில் நடந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது.
தேனி லோக்சபா தொகுதியில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடி, உசிலம்பட்டி, சோழவந்தான் என ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் பெரியகுளமும், சோழவந்தான் தொகுதியும் தனி தொகுதிகள் ஆகும். சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை பெரியகுளம் தொகுதியில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கிறார்கள். கம்பம் தொகுதியில் கவுண்டர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் உசிலம்பட்டி, சோழவந்தான், போடி மற்றும் ஆண்டிப்பட்டியில் முக்குலத்தோர், நாயுடு மற்றும் தலித்துகள் அதிகமாக இருக்கிறார்கள்.
இந்த தொகுதிகளின் சட்டசபை வரலாறு மட்டுமின்றி, நாடாளுமன்ற தேர்தல் வரலாறுகளுமே அதிமுகவிற்கே பெரும்பாலும் சாதகமாக இருந்துள்ளது. எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் அதிமுகவின் கோட்டையாக இருந்தது தேனி மாவட்டம். இங்கு வெற்றிபெற பல ஆண்டுகளாக திமுக போராடி வந்தது. ஆனால் அதிமுக மிகவும் பலவீனமாக இருந்த 1996ல்தான் சாத்தியமானது. 2004, 2014ல் தேனியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வென்றாலும், சட்டசபை வரலாறு அப்படியே வேறுமாதிரி தான் இருந்தது.
இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அப்படியே மாறியது. தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதியில் போடி தொகுதியை தவிர வேறு எங்குமே அதிமுக வெற்றி பெறவில்லை.. அங்குமே கடும் போட்டி இருந்தது. இந்த சூழலில் தேனிலோக்சபா தேர்தலில் திமுக சார்பில் தங்கத் தமிழ்செல்வனும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும் களம் இறங்கிய போதே, அதிமுக கடும் சவாலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே நடந்துள்ளது.
தேனி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் களம் இறங்கிய தங்க தமிழ்செல்வன், டிடிவியை விட 279386 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் கடும் பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக சார்பில் நாராயணசாமி 154871 வாக்குகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் 3வதுஇடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications