திமுக ஒன்றிய செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல்.. வெளிவந்த பகீர் காரணம்- ‘பதவி மோதல்’ பரபரக்கும் தேனி!
தேனி : தேனி தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக பொறுப்பில் இருக்கும் ரத்தினசபாபதியின் வீடு புகுந்து ஒரு கும்பல் உருட்டுக் கட்டை, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
Recommended Video
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னணியில் திமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பான முன்விரோதம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு பதவி கிடைக்காததற்கு காரணமான ரத்தினசபாபதியை பழிவாங்கும் வகையில் சாந்தகுமார் என்பவர் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குக் காரணமானவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தின சபாபதி கோரிக்கை விடுத்துள்ளார். திமுக உட்கட்சித் தேர்தல் தொடர்பாக நடந்த இந்த கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொறுப்பாளர் மீது அட்டாக்
தேனி வடக்கு மாவட்டத்தில் தேனி தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் ரத்தினசபாபதி. இவர் வீரபாண்டி பேரூராட்சித் தலைவராக பணியாற்றியவர். இவர் நேற்று முன் தினம் இரவு வீரபாண்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, ரத்தின சபாபதியை உருட்டுக்கட்டை, இரும்புக் கம்பி மற்றும் கற்களால் கொலைவெறியுடன் தாக்கியுள்ளனர்.

கற்களை வீசி தாக்குதல்
இந்த தாக்குதலில் ரத்தினசபாபதி பலத்த காயமடைந்துள்ளார். அந்த கும்பல் ரத்தினசபாபதி வீட்டின் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் அவரது வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. மேலும், அந்த கும்பல் அங்கிருந்த பொருட்களையும் உடைத்து அந்த இடத்தையே சூறையாடியுள்ளனர். அங்கு ஏற்பட்ட சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

தப்பியோடிய கும்பல்
அக்கம் பக்கத்தினர் வரும் சத்தம் கேட்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் திமுக ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த ரத்தினசபாபதி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணை
இரவு நேரத்தில் திடீரென நடந்த இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வீரபாண்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, இந்த ரவுடி கும்பலுக்கும் ரத்தின சபாபதிக்கும் என்ன சம்பந்தம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சிகள்
ரத்தினசபாபதி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்ததில் வீரபாண்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை மட்டும் கைது செய்துள்ளனர். மற்ற நபர்களை தேடி வருகின்றனர். திமுக ஒன்றிய செயலாளரை வீடு புகுந்து கும்பல் தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

ரத்தினசபாபதி புகார்
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் ரத்தினசபாபதி அளித்த புகாரில், நடந்து முடிந்த திமுக உட்கட்சி தேர்தலில் வீரபாண்டி பேரூர் செயலாளராக தற்போது பதவியில் இருக்கும் வீரபாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் சாந்தகுமார் என்பவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக செல்வராஜ் என்பவருக்கு கட்சித் தலைமை வாய்ப்பளித்தது. பேரூர் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதற்கு நான் தான் காரணம் என சாந்தகுமார் கருதியதால், அவரது தூண்டுதலில் அவரது சகோதரர் மகேந்திரன் தலைமையிலான கும்பல்தான் இந்த கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.

வழக்குப்பதிவு
அவரது புகாரின் அடிப்படையில் வீரபாண்டியை சேர்ந்த வீரபாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் சாந்தகுமார், அவரது தம்பி மகேந்திரன், சாந்தகுமாரின் மகன் தீனா, ராஜேஷ், தாமரைக்கண்ணன், பிரபாகரன், வினோத், தேனி நகர் காவல் நிலைய பெண் காவலர் கவிதா (மகேந்திரனின் மனைவி) உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்த வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்வருக்கு வேண்டுகோள்
மேலும், கட்சித் தேர்தல் தொடர்பான விரோதத்தால் பதவி கிடைக்காத ஆத்திரத்தில் தன் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலுக்கு காரணமான சாந்தகுமார் மீது திமுக கட்சித் தலைமை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தினசபாபதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவம் தேனி மாவட்ட திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications