துப்பாக்கி குண்டுகள் முழங்க.. சொந்த ஊரில் மேஜர் ஜெயந்த் உடல் தகனம்.. வீரவணக்கம் செலுத்திய கிராம மக்கள்
மேஜர் ஜெயந்தின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
தேனி: அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்தின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. இறுதிசடங்கில் குடும்பத்தினர், கிராம மக்கள், ராணுவ வீரர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
சீன எல்லையை ஒட்டி அமைந்து உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா என்ற ஹெலிகாப்டர் நேற்று காலை 9:15 மணியளவில் புறப்பட்டது.
இந்த ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்டுகள் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

ஹெலிகாப்டர் விபத்து
திராங் பகுதியில் இருந்து தவாங் செல்லும் வழியில் உள்ள பொம்திலா என்ற மலைப்பகுதிகள் நிறைந்த இடத்தில் விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தது தெரியவந்தது.

தமிழக விமானி பலி
லெப்டினண்ட் வி.வி.பி. ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் என்று அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்த் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது அப்பகுதியை சோகத்தில் மூழ்க வைத்தது.

மதுரை வந்த ஜெயந்த் உடல்
தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டியின் உடல் ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேஜர் ஜெயந்தின் உடல் விமானப்படை விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேபோல் அமைச்சர் ஐ.பெரியசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை
பின்னர் காலை மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்திற்கு மேஜர் ஜெயந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. இதன் பின்னர் அவரது உடலுக்கு மாவட்ட நிர்வாகம், குடும்பத்தினர், கிராம மக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலித்தினர். இதனைத் தொடர்ந்து, மேஜர் ஜெயந்தின் உடல் ராணுவ வண்டியில் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிசடங்கு நடத்தப்பட்டது. இறுதியாக துப்பாக்கி குண்டுகள் முழங்க மேஜர் ஜெயந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது கிராம மக்கள் அனைவரும் வீரவணக்கம் என்று முழங்கி இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications