பண்ணை வீட்டில் புகுந்த ஓ ராஜா.. கிரீன்வேஸ் சாலை வீட்டில் நுழைந்த ஓபிஆர்.. போகிற போக்கில் அணுகுண்டு
தேனி: அதிமுக பொதுக் குழுவை கூட்டுவதா வேண்டாமா என்ற கேள்விக்கு ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ஓ பி ரவீந்திரநாத் கூறிய பதில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் ரவீந்திரநாத் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். சிறிது நேரம் ஆலோசனைக்கு பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை ஓ பி ரவீந்திரநாத் சந்தித்து பேசினார். அவர் பேசுகையில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சரை சந்தித்தேன். இதை அரசியலாக்குவதில் எவ்வித நியாயமும் இல்லை.

பொதுக் குழு
திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள். தற்போது பொதுக்குழு தொடர்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், தமிழக அரசும் இது தொடர்பாக ஒரு முடிவெடுக்கும்.

சட்ட வல்சட்ட வல்லுநர்கள்
நீதிமன்றத்தை நாடி சட்ட வல்லுநர்களும் முடிவெடுப்பார்கள். ஓபிஎஸ்ஸை யாரும் ஓரங்கட்ட முடியாது என எம்.பி. ரவீந்திரநாத் தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ் பின்னணியில் சசிகலாவும் டிடிவி தினகரனும் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

ஆதாரம் இல்லை
அதற்கு ஓ ரவீந்திரநாத், அதற்கு ஆதாரம் ஏதும் இல்லையே என்றார். தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ்ஸின் பண்ணை வீட்டில் நேற்று முன் தினம் மாலை நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது அங்கு வந்த ஓபிஎஸ் தம்பி ஓ ராஜா, ஓபிஎஸ் கட்சிக்காக நிறைய விட்டுக் கொடுத்தார். இப்போது அனுபவிக்கிறார்.

சசிகலா பின்னணியா
சசிகலா தலைமையில் அதிமுக விரைவில் நல்வழிப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நாளை மறுநாள் பொதுக் குழு கூட்டம் கூட்டப்படும் என எடப்பாடி தரப்பினர் கூறுகிறார்கள். ஒருங்கிணைப்பாளர் இல்லாமல் எப்படி கூடும் என்ற கேள்வி எழுகிறது. எடப்பாடி பழனிச்சாமியை வழிமொழிய வேண்டும் என ஓபிஎஸ்ஸுக்கு பல நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த முறை ஓபிஎஸ் விட்டுக் கொடுப்பதாக இல்லை என்றே தெரிகிறது.
-
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
அமித்ஷாவுக்கு டப்பிங் கொடுக்க வெக்கமா இல்லையா.. எடப்பாடியை வெளுத்து வாங்கிய சிதம்பரம் -
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications