700 கிராம் எடையுடன் பிறந்து.. இறந்ததாக கூறி.. மயானத்தில் மீட்கப்பட்ட சிசு.. பரிதாப மரணம்!
தேனி: தேனியில் இறந்ததாக கூறப்பட்ட பிஞ்சு குழந்தை மயானத்தில் உயிர் பிழைத்த நிலையில் அக்குழந்தை மருத்துவமனையில் இறந்த சம்பவம் மனதை உலுக்கியது.
தேனி மாவட்டம், தாமரைக்குளத்தை சேர்ந்த பாத்திமாமேரி. 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சனிக்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டு வீட்டிலேயே பனிக்குடம் உடைந்துவிட்டது.
இதையடுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அதிகாலை 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 700 கிராம் மட்டுமே இருந்தது.

சுவாச பிரச்சினை
இந்த நிலையில் அந்த குழந்தைக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டதாகவும், பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டதாக செவிலியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த குழந்தை ஞாயிற்றுக்கிழமை காலை பெற்றோரிடம் ஒரு வாளியில் வைத்து ஒப்படைக்கப்பட்டது.

குழந்தைக்கு சடங்கு
இதையடுத்து குழந்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து விட்டு அக்குழந்தையை மயானத்தில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு ஏற்கெனவே குழி தோண்டப்பட்டிருந்தது. அப்போது குழந்தையை தூக்கி குழியில் வைக்க முயன்றபோது உடலில் அசைவு இருந்தது.

உடலில் அசைவு
இதனால் குழந்தை உயிருடன் இருப்பதை அடுத்து மகிழ்ச்சி அடைந்த பெற்றோர் சிகிச்சைக்காக மீண்டும் தேனி மருத்துவமனையில் சேர்த்து வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அங்கு அந்த குழந்தைக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இறந்த குழந்தை
எனினும் அந்த குழந்தை உயிரிழந்துவிட்டது. இதையடுத்து குழந்தை இறந்ததாகக் கூறி அலட்சிய போக்கில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்களிடம் விளக்கம் கேட்டு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications