தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேனியில் அமைச்சர் ஐ பெரியசாமி நடத்திய அரசு ஆலோசனை கூட்டம்.. திடீரென பங்கேற்று திகைக்கவைத்த ஓபிஎஸ்!

Google Oneindia Tamil News

தேனி: தேனியில் அமைச்சர் ஐ பெரியசாமி நடத்திய கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

Recommended Video

    தேனியில் அமைச்சர் ஐ பெரியசாமி நடத்திய அரசு ஆலோசனை கூட்டம்.. திடீரென பங்கேற்று திகைக்கவைத்த ஓபிஎஸ்!

    இந்த கூட்டத்தில் தேனி மாவட்டத்தின் நான்கு தொகுதி எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் தொகுதி எம்எல்ஏக்கள் பங்கற்றனர். இதேபோல் போடி தொகுதி எம்எல்ஏவான ஓ பன்னீர்செல்வமும் பங்கேற்றார்.

    ஸ்டாலினால் எனக்கு கொரோனா..1 கோடி தரனும்.. டுவிட்டரில் வந்த டுமீல் கோரிக்கை.. விசாரிச்சா மேட்டர் வேறஸ்டாலினால் எனக்கு கொரோனா..1 கோடி தரனும்.. டுவிட்டரில் வந்த டுமீல் கோரிக்கை.. விசாரிச்சா மேட்டர் வேற

    இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எம்எம்எல்ஏக்கள் ஆலோசனைகளை வழங்கினர். அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஐ பெரியசாமியிடம் விவரித்தனர்.

    பாராட்டுக்கள்

    பாராட்டுக்கள்

    பொதுவாகவே திமுக ஆட்சி அமைந்த பிறகு மாவட்டங்களில் நடைபெறும் அரசின் ஆலோசனை கூட்டங்களில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அந்த வகையில் அதிமுக எம்எல்ஏக்களும் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை பகிர்ந்தார்கள்.. அந்த வகையில் தான் ஓ பன்னீர்செல்வமும் தான் சொந்த ஊரில் நடந்த கூட்டத்தில் வந்த பங்கேற்றார். அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். அதிமுக திமுக இடையே மாறியுள்ள இந்த பழக்கங்களை, வரவேற்க வேண்டிய மாற்றம் என்று பலரும் பாராட்டுகிறார்கள்

    தேனியில் ஐ பெரியசாமி ஆலோசனை

    தேனியில் ஐ பெரியசாமி ஆலோசனை

    தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி துறை முகமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் (மூன்று பேரும் திமுகவினர்) பங்கேற்றனர். இதேபோல் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும் கலைந்து கொண்டார்கள்

    2மணிநேரம் ஆலோசனை

    2மணிநேரம் ஆலோசனை

    இக் கூட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்துறை, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தது குறித்து ஆய்வுகள் மற்றும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    20 சதவீதமாக குறைந்தது

    20 சதவீதமாக குறைந்தது

    கூட்டம் நிறைவு பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறுகையில், "தேனி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்படைந்த வர்கள் எண்ணிக்கை 30சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்துள்ளது. ஊரடங்கு காலத்தில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் சுமார் 400க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொதுமக்களின் இல்லத்திற்கே சென்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஊரடங்கு கால நடவடிக்கைகளை மாவட்ட காவல்துறை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

    மருந்த வழங்கப்படும்

    மருந்த வழங்கப்படும்

    தொடர்ந்து பேசிய அவர், தேனி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் தேனி மாவட்டத்திற்கு கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்து விரைவில் வழங்கப்பட உள்ளது. 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி நேற்றைய தினம் தேனி மாவட்டத்தில் 1200பேர் வரை செலுத்திக் கொண்டுள்ளனர். தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை

    ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை

    அரசு மருத்துவமனைகள், கொரோனா சிறப்பு நல மையங்கள், என தேனி மாவட்டத்தில் 6 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன. இதில் 1500படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் 53சதவீதமே நிரம்பியுள்ளன. மீதமுள்ள படுக்கைகள் காலியாக உள்ளன. கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்த பின்பே வீட்டிற்கு அனுப்புகின்றோம். மேலும் அத்யாவசிய தேவையான ஆக்சிஜன் உற்பத்தி மையம் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்திலும் ஆக்சிஜன் உற்பத்தி மையம் விரைவில் அமைக்கப்படும். கொரோனா நோய் தொற்று மற்றும் அது தொடர்பான மரணங்கள் குறித்த தகவல்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது" இவ்வாறு ஐ பெரியசாமி தெரிவித்தார்.

    English summary
    aiadmk co ordinator O Panneerselvam participating in the Corona Prevention Advisory Meeting held by Minister I Periyasamy in Theni.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X