சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை போடியில் இருந்து இயக்க வேண்டும்.. தேனி மக்கள் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

தேனி: மதுரையில் இருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலை போடியில் இருந்து இயக்க வேண்டும் என்று தேனி மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் மாவட்டமான தேனிக்கு பல ஆண்டுகளுக்கு பிறகே சென்னைக்கு ரயில் சேவை சாத்தியம் ஆகி உள்ளது. மதுரை - போடிநாயக்கனூர் இடையிலான மீட்டர் கேஜ் பாதை டிசம்பர் 31, 2010ம் ஆண்டு நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.

Pandian Express to Chennai should be operated from Bodinayakkanur: Theni people

சுமார் 12 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2022 ஆண்டு மே மாதம் முதல் தேனியில் இருந்து மதுரை வரையிலான சேவை தொடங்கப்பட்டது. மீதமுள்ள தேனி - போடி இடையிலான பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தது. இந்த வழித்தடத்திலும் பணிகள் முடிந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இயக்கப்படுகிறது.

முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் மதுரை டூ போடிநாயக்கனூர் ரயில், அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் இந்த ரயில் மதுரையிலிருந்து தினசரி காலை 8.20 மணிக்கு இயக்கப்படுகிறது. தினமும் காலை 8. 20 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இந்த ரயில் வடபழஞ்சிக்கு 8:30 உசிலம்பட்டிக்கு 09:04, ஆண்டிப்பட்டி 09:24, தேனிக்கு ரயில் 9.42க்கு வந்தடையும். தேனியில் இருந்து 9:44 மணிக்கு கிளம்பும் ரயில் அங்கிருந்து போடிநாயக்கனூருக்கு 10.30 க்கு சென்றடைகிறது.

அதேபோல் அதேபோல் தினசரி மாலை 5.50 மணிக்கு போடியில் இருந்து கிளம்பும் ரயில் 6.13 க்கு தேனி வந்தடையும். பின்னர் தேனியில் இருந்து புறப்பட்டு 06.33க்கு ஆண்டிப்பட்டி, 06.53மணிக்கு உசிலம்பட்டி, 07.24 மணிக்கு வடபழஞ்சி என 07.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரயிலை தவிர சென்னை விரைவு ரயில், வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக இதனை தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் மதுரையில் இருந்து கோவைக்கு செல்லும் ரயிலை போடியில் இருந்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மக்கள் வைத்துள்ளார்கள்.

திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு மற்றும் தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நிர்வாகிகள், தேனியில் ப.ரவீந்திரநாத் எம்.பி.யிடம் இதுபற்றி கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், "மதுரையில் இருந்து சென்னை செல்லக்கூடிய ரெயில் போடி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த ரயில் தற்போது வாரம் 3 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. அதை அனைத்து நாட்களிலும் இயக்க ஆவன செய்ய வேண்டும்.

இந்த ரயிலில் படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். போடி, தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மதுரைக்கு படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக பல்வேறு தரப்பினரும் சென்று வர காலை 8 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு சென்று, மாலை 5.30 மணிக்கு மதுரையில் இருந்து போடிக்கு வரும் வகையில் ஒரு ரெயில் இயக்க வேண்டும்.

மதுரையில் இருந்து திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக கோவை செல்லும் ரெயில் மற்றும் மதுரையில் இருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரையில் இருந்து விழுப்புரம் வழியாக செல்லக்கூடிய ரயில் ஆகியவற்றை போடியில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை மத்திய ரயில்வே அமைச்சரிடம் கொடுக்க இந்த குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இதனிடையே மதுரை முதல் போடி நாயக்கனூர் வரை மின்மயமாக்கல் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. மின்னல் வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மின்மயமாக்கல் முடிந்த பின்னர், வைகை ரயிலையும், பாண்டியன் ரயிலையும் போடி நாயக்கனூரில் இருந்து இயக்கினால், தேனி, மதுரை மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மையாக இருக்கும் என்று மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+