எங்களுக்கு பொய் சொல்ல தெரியாது… பொய் வாக்குறுதியை தரவும் மாட்டோம்… குஷ்பு பேச்சு
தேனி: பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பிரச்சாரத்தை தொடங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் வழங்குவது இல்லை என்றும், எங்களுக்கு பொய் சொல்லவும் தெரியாது எனவும் கூறினார். மேலும், கேபிள் டிவியில் லட்சுமி ஸ்டோரை பார்த்து தானே எனக்கு கைகொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கிறீர்கள் என்று பேசிய குஷ்பு, அந்த கேபிள் தொகையை கூட கூட்டி விட்டார்கள் என்றார்.
உலகத்திலேயே சிறந்த தலைவராக இருந்தவர் கருணாநிதி என்றும், அவருடைய கட்சியுடன் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே 72 ஆயிரம் கோடி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.
அதேபோல், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வோம் என்றும் இப்பொழுது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் ராகுல் ஆட்சிக்கு வர வேண்டும் என பிரச்சாரம் செய்தார். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகிற 12 ஆம் தேதி தேனி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிட்த்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications