தேனி அருகே கம்பத்தில் காதல் ஜோடி இருந்த கோலம்.. அவமானம் என நினைத்து.. இப்படியுமா யோசிப்பாங்க
தேனி: தேனி மாவட்டம் அருகே சுருளிப்பட்டியில் வசிக்கும் முருகேஸ்வரன் என்பவர் முத்துச்செல்வி என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். முருகேஸ்வரன் கம்பத்தில் ஒரு ஆயில் மில் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். அங்கு கழிவு ஆயிலை எடுத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தாராம். இதை அறிந்த ஆயில் நிறுவனம் அவரிடம் பணத்தை கேட்டிருக்கிறது. அப்போது சமாளித்த முருகேஸ்வரன், நிறுவனத்திற்கு பயந்து தவறான முடிவெடுத்தார். அவரது காதல் மனைவியும் தவறான முடிவெடுத்திருக்கிறார்.
இன்றைக்கு வாழ்க்கையில் எதற்கு எல்லாம் தவறான முடிவெடுப்பது, வாழ்க்கையை முடித்துக் கொள்வது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.. ஏன் இப்படி செய்தோம் என்று அவர்கள் யோசித்து பார்க்கக்கூட முடியாது. ஏனெனில் அவ்வளவு சாதாரண விஷயங்களுக்கு எல்லாம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் முட்டாள்தனத்தை பலர் செய்கிறார்கள்.

வெறும் 18000 பணம்
வாழ்க்கை என்பது வாழ்வதற்கு தான் என்பதை கூட கற்றுக்கொடுக்காமல்விட்ட சமூகமும், அவர்களது குடும்பமும் இத்தகைய சம்பவங்களுக்கு பொறுப்பு . தேனி மாவட்டம் கம்பத்தில ஒரு காதல் ஜோடி வெறும் 18000 பணத்திற்காகவும், அவமானப்படுவோம் என்று நினைத்தற்காகவும் தவறான முடிவெடுத்திருக்கிறார்கள்.
திருநெல்வேலி காதல்.. கண் மட்டுமல்ல மூளையும் இல்லை 40 வயது காதலனுக்காக 16 வயது மாணவி செய்த செயல்
கம்பம் ஆயில் மில்
தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஸ்ரீரங்கம் நகர் கிழக்கு காலனியை சேர்ந்தவர் முகேஷ் என்ற முருகேஸ்வரன் (வயது 25). இவர், முத்துச்செல்வி (20) என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் முருகேஸ்வரன் கம்பத்தை சேர்ந்த ராஜாராம் என்பவரின் ஆயில் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது நிறுவனத்தில் இருந்த ஒரு பேரல் கழிவு ஆயிலை ரூ.18 ஆயிரத்துக்கு முருகேஸ்வரன் விற்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜாராம் அந்த பணத்தை திருப்பிக் கேட்டார். அப்போது 3 நாட்களுக்குள் பணம் தருவதாக சொல்லிவிட்டு முருகேஸ்வரன் வீட்டுக்கு வந்தார். பின்னர் வேலைக்கு செல்லவில்லை.
முருகேஸ்வரன் அச்சம்
இந்த நிலையில் வேலைக்கு சென்றால் தன்னை ராஜாராம் தாக்கி விடுவார் என்று முருகேஸ்வரன் அச்சப்பட்டார். இதைத்தொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரும் அருந்தக்கூடாத செடியின் விதையினை அரைத்து குடித்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயன்றனர். மயங்கி கிடந்த அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தேனி மருத்துவமனையில் அனுமதி
பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முருகேஸ்வரன் உயிரிழந்தார். முத்துலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications