ஒரே ஒரு பொய் தான்.. கோடிகளை குவித்த தேனி பெண் ஆசிரியை.. சிக்கியது எப்படி?
தேனி: தேனி மாவட்டத்தில் அரசு வேலைக்காக ஏங்குவோர் அனைவரிடமும் ஒரே ஒரு பொய் தான் தொடர்ந்து கூறி வந்துள்ளார். அப்படி அவர் கூறிய பொய்யை நம்பி பலரும் பல லட்சத்தை பறி கொடுத்துள்ளனர். இப்படி ஒரே ஒரு பொய் மூலமாக கோடிகளை குவித்துள்ளார் தனியார் பள்ளி ஆசிரியை. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியைச் சேர்ந்த கனகதுர்கா தேனி போலீசிடம் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையை சேர்ந்தவர் சுந்தரவிக்னேஷ் என்பவர் பொறியாளர் ஆவார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். என்ஜினியர் சுந்தரவிக்னேஷ் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகார் மனுவில், "என்னுடைய அக்கா திவ்யா, அவருடைய தோழி செல்வராதா ஆகியோர் தேனி ஏரியாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியைகளாக வேலை பார்த்து வருகிறார். தேனி பழனிசெட்டிபட்டி கே.எம்.சி. கார்டனில் வசித்த கனகதுர்கா என்ற முனியம்மா (வயது 35), என் அக்காவின் தோழியான செல்வராதாவிடம் தான் கல்வித்துறையில் இணை இயக்குனராக பணியாற்றுவதாக கூறியிருக்கிறார். மேலும் தன்னிடம் பணம் கொடுத்தால் பள்ளி கல்வித்துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார்.
மேலும், எனது அக்கா திவ்யாவுக்கு ஆசிரியை வேலையும், எனக்கு கணினி ஆய்வாளர் வேலையும் வாங்கித் தருவதாகவும் ககனதுர்கா கூறினார். நாங்கள் இருவர் மற்றும் எனது நண்பர்கள் இஜாஜ்அகமது, பாண்டி, பாலஸ்ரீகோகுல் ஆகியோர் அரசு வேலைக்காக கனகதுர்காவிடம் வங்கிக் கணக்கு மூலம் ரூ.33 லட்சம் அளித்தோம். அதுபோல், இ.புதுப்பட்டியை சேர்ந்த ஒச்சு என்ற சூர்யா, கம்பம் வடக்கு பட்டியை சேர்ந்த சரண்யா ஆகியோர் சேர்ந்து, மேலும் 26 பேரிடம் ரூ.78 லட்சத்து 21 ஆயிரம் என மொத்தம் ரூ.1 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் மோசடி செய்து விட்டனர்" என கூறினார்.
அந்த புகாரின் பேரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து கனகதுர்கா, ஒச்சு என்ற சூர்யா, சரண்யா ஆகிய 3 பேர் மீதும் கடந்த மார்ச் மாதம் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த வழக்கில் ஒச்சு என்ற சூர்யாவை (38) கடந்த ஏப்ரல் மாதம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
முனியம்மாள் என்ற கனகதுர்கா குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை சேர்ந்தவர் என்றும், ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவிட்டு பின்னர் வேலையில் இருந்து நின்று விட்டதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் பழனிசெட்டிபட்டியில் வசித்தபோது இந்த மோசடியில் ஈடுபட்டார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த தனியார் பள்ளி ஆசிரியை கனகதுர்காவை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் இருந்த கனகதுர்காவை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் கனகதுர்காவை தேனி மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதுடன், தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications