சிரிச்சிட்டே சொன்ன தேனி பூபாலன்.. "சங்கு பிடிச்சு நெம்பிட்டேன்..ம்மா" .. 60 சவரன் தங்க நகை போட்டும்?

Subscribe to Oneindia Tamil
Theni police husband Boobalan and 60 sovereign gold jewellery for dowry, what did his mother sayTheni police husband Boobalan 60 sovereign gold jewellery for dowry, தேனி போலீஸ் பூபாலன் 60 சவரன் தங்க நகைகள், தங்கப்பிரியா,Theni , Boobalan , 60 sovereign gold jewellery, தேனி, பூபாலன், 60 சவரன் தங்க நகைகள்,கழுத்தில் 60 சவரன் தங்க நகை.. "சங்கு பிடிச்சு நெம்பி விட்டுட்டேன்".. சிரிச்சிட்டே சொன்ன தேனி பூபாளன்

தேனி: தேனியை சேர்ந்த பெண் ஆசிரியரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய போலீஸ்காரர் பூபாலன் கைதாகியிருக்கிறார்.. பெண்ணின் மாமனார் செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. பூபாலனை தவிர மற்ற அனைவருமே தலைமறைவாக உள்ளதால், போலீசார் வலைவீசி வருகின்றனர்... இதனிடையே, பூபாலன் தன்னுடைய அப்பா, அம்மாவிடம் பேசும் ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் செந்தில்குமரன். இவரது மகன் பூபாலன்.. மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி ஸ்டேஷனில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்கப்பிரியா என்பவருடன் கடந்த 2017ல் திருமணம் நடந்தது. தற்போது இந்த தம்பதிக்கு 7, 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய கணவரும், மாமனார் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை செய்வதாக, தேனி பெண் புகார் தந்துள்ளார்.. 60 சவரன் நகை, பைக், உள்ளிடட சீர்வரிசைகளை தந்தும், இன்னும் வரதட்சணை வேண்டும் என்று கேட்டு, பூபாலன், தன்னை தாக்கியதாக தங்கப்பிரியா புகாரில் கூறியிருந்தார்.

நாத்தனரை காணோம்இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பூபாலனும் கைதாகி உள்ளார்.. தம்பதியினரிடையே மோதலைத் தூண்டிவிட்டதே, தன்னுடைய மாமனார், மாமியார், நாத்தனார்தான் என்று, பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியிருக்கிறார்.. ரூமில் பூட்டி வைத்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கணவர் தன்னை தாக்கியதாகவும் தங்கப்பிரியா கண்ணீர் விடுகிறார்.

தங்கபிரியாவின் முகம் , கை , கால் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் அடைந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தங்கைக்கு பூரிப்பு

நேற்றைய தினம், தன்னுடைய தங்கையிடம் பூபாலன் பேசிய ஆடியோ ஆன்லைனில் வெளியாகி, அதிர்ச்சியை தந்திருந்தது.. அதில் தன்னுடைய கழுத்தை நெரித்தும், காலால் மிதித்தும் டார்ச்சர் செய்ததாக தங்கையிடம் சிரித்து கொண்டே பேசியிருந்தார் பூபாலன்.வாயில் குத்தினேன்.. கழுத்து, கைகாலில் அடிச்சுதல அவளால நடக்கக்கூட முடியல என்று பூபாலன் சொன்னதை கேட்டு, தங்கை அனிதா சந்தோஷத்தை வெளிப்படுத்தியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அம்மா - மகன் உரையாடல்

இன்றைய தினம் மருமகள் மாமனாரிடம் பேசிய ஆடியோவும், தன்னுடைய அம்மாவிடம் பூபாலன் பேசிய ஆடியோவும் வெளியாகி வைரலாகி , பொதுமக்களின் கோபத்தை மேலும் அதிகமாக்கிவிட்டு வருகிறது.

அம்மா: படாத இடத்தில் பட்டிருந்தா என்னாவது?

பூபாலன்: சங்கு பிடிச்சு நெம்பி விட்டுட்டேன்.. குரல்வளையை பிடிச்சி நெறிச்சதுமே, தொண்டை கட்டிக்கிடுச்சு.. வலியில் எச்சைகூட விழுங்க முடியல.. ரொம்பலி வலிக்குது போல.. ஆளே ஒரு மாதிரி ஆயிட்டா.. சுணங்கிட்டாள்.. முகமெல்லாம் அவளுக்கு மாறிப்போச்சு..

அம்மா: அப்ப திமிர்ல ஏன் இவ்ளோ பேசுறா?

பூபாலன்: நமக்குள்ள நடக்கிற வீட்டு விஷயத்தை பூரா ஏன் அவங்ககிட்ட சொல்றேன்னு என்னை கேட்குறா.. வீட்டுக்கு பெரியவங்க அவங்கதான், வீட்டு விஷயத்தை அப்பா, அம்மா கிட்டதானே சொல்ல முடியும்? ஒரு பிரச்சனை வந்தப்போ நீதானே என் அப்பாகிட்ட பேசுனே? அப்ப மட்டும் மாமனார் தேவையா உனக்கு?"ன்னு கேட்டேன்" என்று பூபாலன் பேசுகிறார்.

{https://lh3.googleusercontent.com/a/ACg8ocJWPKElIHjZrs8SP6KWxjayVJvW4OFt5t7gkWqNEMw2AKqtjdnM=s40-p}
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+