Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் விளையாட்டு வீராங்கனை மோகனப்பிரியா.. மோசமான காதல் கணவனுக்கு மறக்க முடியாத தண்டனை

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி அருகே வாழையாத்துப்பட்டியை சேர்ந்த 34 வயதாகும் விளையாட்டு வீரரான கோடீஸ்வரன், சக விளையாட்டு வீராங்கனையும் பட்டதாரி பெண்ணுமாகிய மோகனப்பிரியாவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் மனைவி தன்னை விட அதிகம் படிப்பதில் உடன்பாடு இல்லாதததால் கோடீஸ்வரனின் செயல்பாடு மாறி உள்ளது. இதனால் மோகனப்பிரியா வாழ்க்கையையே முடித்துக் கொண்டார். இந்த வழக்கில் கோடீஸ்வரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தன்னை விட படித்த பெண்ணாக மனைவி இருப்பதை சில ஆண்கள் விரும்புவது இல்லை. இதேபோல் சில கணவன்கள் தன்னைவிட மனைவி அறிவாளியாக இருப்பதையும், ஆங்கில புலமை உள்ளவராக இருப்பதையும் ரசிப்பது இல்லை.. இதேபோல் சில ஆண்கள் தன்னைவிட மனைவி அதிகம் சம்பாதிப்பதையும் விரும்புவது இல்லை..

theni sports marriage

மனைவி என்பவள் அடுப்பங்கரையில் சமைப்பவர், துணி துவைப்பவர், குழந்தைகளை பார்த்துக் கொள்பவர், தான் எது சொன்னாலும் அதை கேட்டு நடப்பவள் என்று நம்புகிறார்கள். அதைத்தான் விரும்புகிறார்கள். என்ன தான் முற்போக்காக பல விஷயங்கள் மாறினாலும் சில ஆண்களின் ஆழ்மனதில் இந்த சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக அந்த பெண்கள் கணவன் குடும்பத்தினரால் கொடுமைக்கு ஆளாகிறார்கள். இறுதியில் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்.. அப்படி ஒரு சம்பவம் தேனியில் நடந்துள்ளது. அதற்கு காரணமான கணவனுக்கு 7 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தேனி அருகே வாழையாத்துப்பட்டியை சேர்ந்த 34 வயதாகும் கோடீஸ்வரன் என்பவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மோகனப்பிரியா (21). அவர் பி.எஸ்.சி. படித்து முடித்ததோடு, விளையாட்டு வீராங்கனையாகவும் இருந்தார். கோடீஸ்வரன், மோகனப்பிரியா இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள் ஆவார். கோடீஸ்வரனும் விளையாட்டு வீரராக இருந்ததால், ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் சந்தித்த போது காதல் மலர்ந்தது. 3 ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி திருமணம் செய்துள்ளனர்.

இந்த காதல் திருமணத்தை மோகனப்பிரியாவின் பெற்றோர் ஏற்கவில்லை. கோடீஸ்வரனின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டனர். திருமணத்துக்கு பிறகு மோகனப்பிரியா மேல்படிப்பு படித்து வந்துள்ளார். இதனால், மனைவி தன்னை விட அதிகம் படிப்பதில் உடன்பாடு இல்லையாம். அவருடைய படிப்புச் செலவுக்கு அவர் பணம் கொடுக்காமல் இருந்தாராம். மேலும், அவர் தனது மனைவி உடை அணிவதிலும் கடும் கட்டுப்பாடுகள் விதித்தாராம்

இதனால், மனம் வெறுத்த மோகனப்பிரியா 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி தனது கணவர் வீட்டில் உயிரை விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, தேனி பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் முதலில் தற்கொலை என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கை மாற்றினார்கள்.

தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக கோடீஸ்வரன், அவருடைய தாய் புனிதாவதி ஆகிய 2 பேர் மீதும் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் குருவராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவில், கோடீஸ்வரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி அனுராதா நேற்று தீர்ப்பளித்தார். அதேநேரம் கோடீஸ்வரனின் தாயார் புனிதாவதி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+