Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் நடந்தது ரியல் சாதனை.. சாதித்த கிராம மக்கள்.. நிரந்தர மக்கள் நீதிமன்றம் பற்றி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

தேனி: மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு கூட அரசிடம் இன்று வரை போராட வேண்டியுள்ளது.என்னதான் வார்டு கவுன்சிலர், பஞ்சாயத்துதலைவர், நகராட்சி தலைவர், மேயர், எம்எல்ஏ,மந்திரி,முதல்வர் என பலர் மக்களுக்காக இருந்தாலும், அரசு அதிகாரிகளை வேலை செய்ய வைக்கவே நீதி மன்றம் வரை போக வேண்டியநிலை இன்று வரை இருக்கிறது. தேனி அருகே தங்கள் பகுதிக்கு அரசு பேருந்துகளை கூடுதல் சேவை இயக்க,அந்த மக்கள் நீதிமன்றம் வரை போய் சாதித்துள்ளார்கள்.

தேனியில் இருந்து உப்புக்கோட்டை, டொம்புச்சேரி வழியாக தேவாரத்துக்கு பஸ் வசதி உள்ளது. காலை, மாலை நேரங்களில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அதிகம் காணப்படுவது வழக்கம். மக்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்து வந்தனர். இதனால் கூடுதல் பஸ் வசதி இயக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

What happened in Theni is a real achievement Do you know about the permanent people s court

சாதித்த தேவாரம் மக்கள்

இந்த மனு மீது நீதிபதி ஏ.கே.கே.ரஜினி விசாரணை நடத்தினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தேவாரத்துக்கு மாலை நேரத்தில் கூடுதல் பஸ் இயக்கவும், காலை நேரத்தில் ஏற்கனவே இருந்த பஸ்களின் பயண நேரத்தை அலுவலர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் முன்கூட்டியே இயக்கும் வகையில் மாற்றியமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்த அறிக்கையை நீதிபதியிடம், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நேற்று சமர்ப்பித்தனர். இப்போது கூடுதல் பேருந்துகள் அந்த வழித்தடத்தில் ஓடப்போகிறது.

மக்கள் அறிய வேண்டிய ஒரு விஷயத்தை பற்றி பார்ப்போம். பேருந்து சேவை உள்பட மக்களின் அடிப்படை சேவைகளுக்காகவே நிரந்தர மக்கள் நீதிமன்றம் இருக்கிறது. இது போன்ற கோரிக்கைகளை அங்கு முன்வைக்க முடியும். இதற்கு சட்டத்தில் முழுமையான இடமுண்டு.

பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படைச் சேவைகளை தடையின்றி வழங்குவதை உறுதி செய்யவே நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் போக்குவரத்துச் சேவைகள் வருகின்றன. எனவே, ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றாலோ அல்லது போதிய பேருந்து வசதி இல்லை என்றாலோ நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:

யார் புகார் அளிக்கலாம்?:

தனிநபரோ அல்லது ஒரு பகுதியின் மக்கள் அனைவரும் இணைந்தோ மனு தாக்கல் செய்யலாம்.

எங்கே அணுகுவது?: ஒவ்வொரு மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம் இருக்கும். அங்கு நிரந்தர மக்கள் நீதிமன்றம் செயல்படும்.

கோரிக்கை மனு: ஒரு வெள்ளைத்தாளில் உங்கள் பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் மக்கள் சந்திக்கும் சிரமங்களை விளக்கி, "பேருந்துகளை இயக்க உத்தரவிட வேண்டும்" என்று மனு அளிக்கலாம். இதற்கு நீதிமன்றக் கட்டணம் கிடையாது.

யார் மீது புகார்?: சம்பந்தப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் அல்லது மண்டல அதிகாரி மீது புகார் அளிக்கலாம்.

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் சிறப்பு என்ன?

சமரச முயற்சி: முதலில் போக்குவரத்துக் கழக அதிகாரிகளையும் உங்களையும் அழைத்து சமரசம் செய்ய முயற்சிப்பார்கள்.

தீர்ப்பு வழங்கும் அதிகாரம்: இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்றால், நீதியரசர் மற்றும் உறுப்பினர்கள் வழக்கை விசாரித்து நேரடியாகத் தீர்ப்பு வழங்க முடியும்.

கட்டாய உத்தரவு:

இந்த நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு ஒரு சிவில் நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. எனவே, பேருந்து இயக்கப்பட வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டால், போக்குவரத்துக் கழகம் அதைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். 1 கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்புள்ள அல்லது பொதுப் பயன்பாட்டுச் சேவைகள் தொடர்பான வழக்குகளை மட்டுமே இந்த நீதிமன்றம் விசாரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+