ஓபிஎஸ் விட்ட தூது.. மறைமுகமாக ஆழம் பார்க்கும் பிளான்? இந்த முறையும் ‘அதே புள்ளி’- பரபரக்கும் அதிமுக!
தேனி : தேனி மாவட்ட அதிமுகவில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளன. ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடும் மோதல் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர் சையது கான் டி.டி.வி.தினகரனை சந்தித்துள்ளது பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது.
தேனி மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராகவும், ஓ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளருமான சையது கான், சமீபத்தில், சசிகலா மற்றும் டி.டிவி.தினகரனை தங்களுடன் இணைத்து கொள்வோம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தேனியில் இன்று நடைபெறும் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை, சையதுகான் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.

அதிமுக பிளவு
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஏற்பட்டுள்ள கடுமையான பிளவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர். தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்கள் பலரும் ஈபிஎஸ்ஸால் நீக்கப்பட்டுள்ளனர்.

தேனி சையது கான்
ஓபிஎஸ்ஸின் நிழல் போல, அவரது தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான். ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியை குறிவைத்து ஈபிஎஸ் தரப்பு பலரை தங்கள் பக்கம் இழுத்தபோதும், அசையாமல் உறுதியாக நின்றார் சையது கான். இதையடுத்து ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஈபிஎஸ் தரப்பால் நீக்கப்பட்ட நிலையில், அந்த பட்டியலில் சையது கானின் பெயரும் இடம் பெற்றது. ஆனால், ஓபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரை சையது கான் தான் தேனி மாவட்ட செயலாளர்.

துக்க வீட்டில் சந்திப்பு
இந்நிலையில், அமமுக அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரையின் மனைவி கடந்த வாரம் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்த அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் சென்றிருந்தார். அப்போது அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் அங்கு வந்திருந்தார். இதனையடுத்து நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இருவரும் ஒருவருக்கொருவர் வணக்கம் செலுத்தி நலம் விசாரித்துக்கொண்டனர். இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

உற்சாக சந்திப்பு
அதைக் கூட யதேச்சையான சந்திப்பு எனக் கூறி கடந்துவிட்டாலும் இன்று மீண்டும் டிடிவி.தினகரனை தனது ஆதரவாளர்களோடு சந்தித்து சையது கான் வரவேற்றுள்ளது பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இன்று தேனி மாவட்ட அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தேனி சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை சையது கான், அதிமுக ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுடன் சென்று உற்சாகமாக வரவேற்றுள்ளார்.

கிளம்பும் சந்தேகம்
ஓ.பன்னீர் செல்வத்தின் நம்பிக்கைக்குரிய புள்ளியாக இருக்கும் சையது கான் திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து வரவேற்பு அளித்தது தான் தற்போது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைப்படியே சையது கான், தினகரனை சென்று சந்தித்திருப்பாரோ என்ற சந்தேகங்களும் கிளப்பப்படுகிறது. ஏனென்றால், ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில், அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் ஓபிஎஸ் கூடிய, தேனி மாவட்ட அதிமுகவினர் சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.

ஆழம் பார்க்கும் ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை எனக் கூறி வருகின்றனர். ஓபிஎஸ்ஸின் சகோதரர் ராஜா மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு அளித்து வருகின்றனர். ஓபிஎஸ்ஸூம், சசிகலாவுக்கு எதிராகப் பேசுவதே இல்லை. எனவே ஓபிஎஸ் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும் தனது ஆதரவாளர்கள் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்ற பேச்சு இருந்து வருகிறது.

சசிகலா ஆதரவு
ஏற்கனவே, சசிகலா, தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற தீர்மானம் என்னுடைய தனிப்பட்ட கருத்து அல்ல, தேனி மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதிலும் ஒவ்வொரு அடிமட்டத் தொண்டர்களின் விருப்பமும் அதுதான். சசிகலாவை கட்சியில் இணைந்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் எனப் பேசியிருக்கிறார் சையது கான். சசிகலாவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்த சையது கான், ஓபிஎஸ்ஸின் நிழல் என்பதாலேயே எடப்பாடி பழனிசாமியால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
Recommended Video

இணைப்பு உறுதி?
இந்நிலையில் தான் தற்போது தனக்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரனின் ஆதரவு வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், இன்று டிடிவி.தினகரனை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் சையது கான். தனக்கு தினகரன் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காக ஓபிஎஸ்ஸே இந்தச் சந்திப்பிற்குத் திட்டமிட்டிருக்கக் கூடும் என்கிறார்கள் தேனி மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள்.
-
5 பவுன் தங்கம்.. ஒரு லட்சம் ரொக்கம்! பரிசு மழை அறிவித்த ஓபிஎஸ்.. போடி தொகுதி திமுகவினர் உற்சாகம் -
4300 கோடி சொத்து இருந்தும் லீமா ரோஸ் அடித்த பல்டி? எடப்பாடி பழனிசாமி கணக்கை மாற்றிய ரிவர்ஸ் உத்தி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
உதயநிதி கேட்டதில் என்ன தப்பு? - எடப்பாடியை விமர்சித்த சசிகலா.. பழிக்குப் பழியா இது? -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு!












Click it and Unblock the Notifications