எப்போ பாஸ் வருவீங்க.. தினகரன் வருகைக்காக குற்றாலத்தில் காத்திருக்கும் முன்னாள் எம்எல்ஏக்கள்!
குற்றாலத்தில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் எல்லோரும் அவரின் வருகைக்காக காத்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: குற்றாலத்தில் தங்கி இருக்கும் தினகரன் ஆதரவு முன்னாள் எம்எல்ஏக்கள் எல்லோரும் அவரின் வருகைக்காக காத்து இருக்கிறார்கள்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் முடிவு தினகரன் தரப்பிற்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மிகவும் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்ட தகுதி நீக்க வழக்கில்18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹைகோர்ட் தீர்ப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.'

குற்றாலம்
தற்போது இந்த முன்னாள் எம்எல்ஏக்கள் எல்லோரும் குற்றாலத்தில் உள்ளனர். குற்றாலத்தில்தான் கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் முகாமிட்டுள்ளனர். தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று நினைத்து அவர்கள் குற்றாலத்தில் தங்கி இருந்தனர்.

சென்னை
இன்று குற்றாலத்தில் இவர்கள் எல்லோரும் சென்னை கிளம்ப வாய்ப்புள்ளது. இன்று இரவு கிளம்பி நாளை அதிகாலை கூட சென்னைக்கு வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இனி குற்றாலத்தில் தங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவர்கள் உடனே கிளம்ப வாய்ப்புள்ளது.

காத்திருக்கிறார்கள்
தினகரனின் வருகைக்காகதான் தற்போது அவரின் ஆதரவாளர்கள் எல்லோரும் குற்றாலத்தில் காத்துள்ளனர். இன்று மாலை தினகரன் அங்கு செல்வார் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்றாலத்தில் உள்ளவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மீட்டிங்
குற்றாலத்திற்கு தினகரன் வந்த பின் கூட்டம் ஒன்று நடத்த இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். அதுமட்டுமில்லாமல், அடுத்து என்ன செய்யலாம் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்வார்கள்.
-
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications