ஷாக்.. விஜய் கண்முன்னே சோகம்.. பெண்கள் உள்பட 6 பேர் காயம்! நிவாரண நிகழ்ச்சியில் நடந்த அந்த சம்பவம்
திருநெல்வேலி: திருநெல்வேலி, தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நடிகர் விஜய் நிவாரண உதவிகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் இடையே பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரியில் கடந்த 17 மற்றும் 18 ம் தேதிகளில் கனமழை பெய்தது. இடைவிடாது கொட்டிய மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. இருப்பினும் வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் 30க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். மேலும் கால்நடைகள் இறந்ததோடு மக்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் வெள்ளம் பாதிப்புக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிகம் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.6 ஆயிரமும், குறைந்த அளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படுகிறது.
ஏய்.. ஏய்.. திடீரென டென்ஷனான புஸ்ஸி ஆனந்த்! நடிகர் விஜய் கூறிய அந்த வார்த்தை - பரபரப்பு
இதற்கிடையே தான் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் இன்று வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு நடிகர் விஜய் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் இருக்கும் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் விஜயின் ரசிகர்கள், மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. மாறாக நிவாரண உதவிகள் பெறும் டோக்கன் வைத்திருப்பவர்கள் மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
திடீரென காலில் விழுந்த ரசிகர்! பதறிய விஜய்.. அடுத்து செய்த சம்பவம்.. கவனம் ஈர்த்த தளபதி - நெகிழ்ச்சி
நிவாரண உதவிகளை பெற்றபோது நடிகர் விஜயுடன் செல்பி எடுத்து கொண்டனர். மேலும் சிலர் விஜயை பார்த்த உற்சாகத்தை அவரை கட்டியணைத்தும், முத்தம் கொடுத்தும் அன்பை வெளிப்படுத்தினர். நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு நடிகர் விஜய் மண்டபத்தை விட்டு புறப்பட்டார். அப்போது அவரை பார்க்க அங்கு திரண்டு இருந்தவர்கள் போட்டிப்போட்டு கொண்டு முண்டியடித்தனர்.
இந்த சமயத்தில் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜயின் கார் மீது சிலர் விழுந்தனர். மேலும் சிலர் தரையில் விழுந்தனர். இதனால் 2 பெண்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் நிவாரண நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக நடிகர் விஜய் நிவாரண உதவிகள் மண்டபத்தில் தவறி விழுந்தார். அதாவது நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விஜயுடன் ஏராளமானவர்கள் மண்டபத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதோடு விஜய் நுழைந்தவுடன் வேகமாக கதவை அடைத்தனர். அப்போது திடீரென்று நடிகர் விஜய் நிலைத்தடுமாறி விழப்போனார். ரசிகர்கள் அவரை தாங்கி பிடித்தனர். அப்போது டென்ஷனான புஸ்ஸி ஆனந்த கதவை வேகமாக மூடிய நபரின் முதுகில் சட்டென அடித்தார். இதுவும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications