தினமும் கொலை, கொள்ளை.. இதுதான் தி.மு.க ஆட்சியின் சாதனை.. ஓ.பி.எஸ் பரபரப்பு பேச்சு!
திருநெல்வேலி: தி.மு.க ஆட்சியின் அவலநிலையை எடுத்து சொல்லி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது

அ.தி.மு.க
உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சிகளை விட அ.தி.மு.க முதன் முதலாக வேகமாக களமிறங்கி உள்ளது. ஏனெனில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே கட்சியில் கூடுதல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 9 மாவட்டங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தற்போது அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கடசியினருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையை அடுத்த செங்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு வேட்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது

பொய்யான வாக்குறுதிகள்
தி.மு.க.வின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் வாக்களித்து இன்று அதற்கான கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்கிறது. இதுதான் திமுக ஆட்சியின் சாதனைகளாக இருக்கின்றது. கடந்தகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும்.

வேண்டுகோள்
இத்துடன் இன்றைய தி.மு.க ஆட்சியின் அவலநிலையை எடுத்து சொல்லி உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும். வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீத வெற்றியை பெற வேண்டும் என்று ஓபிஎஸ் கூடியிருந்த வேட்பாளர்கள் இடையே வேண்டுகோள் விடுத்தார் இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சட்டமன்ற உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் இசக்கி சுப்பையா மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications