திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"முளைத்த முடிச்சு".. அந்த பேரே வரலியே.. டிடிவி தினகரன் யாரை சொல்றாரு.. அடடே.. ஓபிஎஸ்ஸூக்கு செம குஷி

அறிவாலயத்தில் கருணாநிதியின் பேனா சிலையை வைக்கலாம் என்று டிடிவி தினகரன் கருத்து கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

நெல்லை: அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும், அப்போது தான் திமுக என்ற அரக்கனை வெல்ல முடியும் என்று அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக விவகாரம் வெடித்துள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்தி வரும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெரும் மோதலும் சலசலப்பும் நேற்றைய தினம் ஏற்பட்டது.

‛294’ பெரும்படை.. ஈரோடு கிழக்கில் வேட்பாளர் அறிவித்த கையோடு அமமுக ‛மெகாமூவ்’!டிடிவி தினகரன் அதிரடி ‛294’ பெரும்படை.. ஈரோடு கிழக்கில் வேட்பாளர் அறிவித்த கையோடு அமமுக ‛மெகாமூவ்’!டிடிவி தினகரன் அதிரடி

 புதைக்க விட்டதே தப்பு

புதைக்க விட்டதே தப்பு

கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான திமுகவினரும் கூடியிருந்தனர். இந்த கூட்டத்துக்கு சீமானும் வரப்போவதாக சொல்லியிருந்ததால், நாம் தமிழர் கட்சியினரும் திரளாக வந்திருந்தனர். பேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் பேசும்போதே, கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் கூச்சலிட்டு, அவரை பேச்சை நிறுத்தும்படி சொன்னார்கள்.. அப்போது சீமான், "உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்திருக்கிறது? கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேணும்னா, அறிவாலயத்தில் போய் வையுங்கள்... நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள், கடலுக்குள்தான் வைப்பார்களாம். நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன்" என்று கூறியிருந்தார்.

 திமிர்ப்பேச்சு

திமிர்ப்பேச்சு

சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் தங்கள் கருத்தை கூறிவருகிறார்கள்.. பாஜக பின்னால் இருக்கும் துணிச்சலில்தான், சீமான் பேச்சில் இவ்வளவு திமிர் வெளிப்படுகிறது. திமிரை அடக்கியே தீர வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சுப.வீரபாண்டியன் ஆவேசமாக கூறியிருந்தார்.. இருக்கிற நிதிநெருக்கடியில், பேனா நினைவு சின்னம் அமைக்க, பொதுமக்களின் வரிப்பணத்தை செலவழிப்பது உகந்ததா? என்று விகே சசிகலா காட்டமாக கேட்டிருந்தார்.. அந்தவகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

 தினகரன் பளீர்

தினகரன் பளீர்

நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.. பின்னார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், ஒரு சிலரின் சுயநலத்தால், அதிமுக கட்சி இன்று மிகவும் பலவீனமடைந்துள்ளது. சுயநலத்துடன், பணபலத்துடன் சிலர் செயல்பட்டதால் தான் அதில் இருந்து வெளியேறி அமமுக கட்சியை உருவாக்கினேன்... கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் வரும் தேர்தல்களில் மக்கள் வெற்றி வாய்ப்பை தருவார்கள் என நாங்கள் நம்புகிறோம். காலம் எல்லாவற்றிற்கும் தீர்வு தரும்... ஈரோடு தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்போம்... மக்கள் விரோத போக்கை செய்து வரும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது தான் அமமுக நோக்கம்.

அறிவாலயம்

அறிவாலயம்

நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் பேனா நினைவு சின்னத்தை அறிவாலயத்தில் வைக்கலாம்... ஆனால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கும் வண்ணம் கடலில் வைக்க கூடாது. அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய வேண்டும். அப்போது தான் திமுக என்ற அரக்கனை வெல்ல முடியும்... இதை தான் ஓபிஎஸ் சொல்கிறார்... ஓபிஎஸ் தேர்தலில் நிற்க வேட்பாளரை அறிவிக்கட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்... நிதிநெருக்கடி இருக்கும்போது பேனா எதற்கு என்று சீமான் கேட்டதையேதான், சசிகலாவும் கேட்டிருந்தார்.. சசிகலா கேட்டதையேதான், தினகரனும் தற்போது கேட்டிருக்கிறார்.

 குறி திமுக

குறி திமுக

அதுமட்டுமல்ல, தன் பேட்டியின்போது, ஓபிஎஸ் பெயரை வெளிப்படையாக தினகரன் சொல்லி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி பெயரை உச்சரிக்கவில்லை.. அதேபோல, வழக்கம்போல், திமுகதான் பிரதான எதிரி என்பதை, மீண்டும் ஒருமுறை அழுத்தமாக சொல்லி உள்ளார்.. இடைத்தேர்தலில் வேட்பாளரை யார் என்று முடிவுசெய்து அறிவித்துவிட்டு, அமமுகவின் ஆதரவை ஓபிஎஸ் கேட்டு சென்றால், நிச்சயம் தினகரன் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தருவார் என்று, கடந்த சில நாட்களாகவே அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
AMMK General Secretary TTV Dinakaran slams DMK Government and says about ADMKs local politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X