மூக்காண்டி தூங்குகிறார் என்றே அத்தனை பேரும் நினைத்தனர்.. அருகில் போய்ப் பார்த்தால்.. பரிதாபம்!
அரசு பஸ்ஸில் பயணம் செய்த நபர் மாரடைப்பால் மரணமடைந்தார்
நெல்லை: மூக்காண்டி தூங்கி கொண்டு இருக்கிறார் என்றுதான் முதலில் எல்லோருமே நினைத்தார்கள்.. ஆனால் கிட்ட போய் பார்த்த பிறகுதான் ஷாக் ஆனார்கள்!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் மூக்காண்டி. 61 வயதாகிறது. இவர் ஒரு ஓய்வு பெற்ற மில் தொழிலாளி.
இந்நிலையில், இவரது மகள் முக்கூடலில் வசிப்பதால், அவரை பார்த்துவிட்டு ஊர் திரும்ப முயன்றார். இதற்காக பாபநாசம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸில் ஏறி கொண்டார். ஆனால், பஸ் விக்கிரமசிங்கிபுரம் வந்ததும் அவர் இறங்க வேண்டிய பஸ் ஸடாப் வந்தும் இறங்கவில்லை. இதனால் பஸ் அங்கிருந்து புறப்பட்டு பாபநாசம் நோக்கி சென்றது.

அரசு பேருந்து
ஆனால், பஸ் விக்கிரமசிங்கிபுரம் வந்ததும் அவர் இறங்க வேண்டிய பஸ் ஸடாப் வந்தும் இறங்கவில்லை. இதனால் பஸ் அங்கிருந்து புறப்பட்டு பாபநாசம் நோக்கி சென்றது. இதே பஸ்ஸில் இருந்த சிலர் பாபநாசம் காலேஜ் ஸ்டாப்பில் இறங்கினர்.

அசைவு இல்லை
அப்போது மூக்காண்டி தூங்குவது போல இருந்ததை பார்த்து, கண்டக்டர் அருகில் சென்று எழுப்பினார். ஆனால் எந்தவித அசைவும் அவரிடமிருந்து இல்லை. இதனால் பாபநாசம் டிப்போ பக்கமாக ஓரங்கட்டப்பட்டது. உடனடியாக அரசு பஸ் அதிகாரிகள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.

ஆஸ்பத்திரி
அவரிடம் மூக்காண்டி பற்றி கேட்டதற்கு, "அவர் இறந்து விட்டாரா அல்லது இல்லையா என்பதை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார், மூக்காண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதிர்ச்சி
இறந்துபோன மூக்காண்டிக்கு சுப்புலெட்சுமி என்ற மனைவியும் மூன்று மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.
இதில் மகன் மும்பையில் வசித்து வருகிறார். பஸ்ஸில் பயணம் செய்த ஒருவர் பயணித்தபடியே இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications