’வாழை’ ரியல் ஹீரோவுக்கு விருது..! மாரி அக்காவுக்கு நடந்தது என்ன? உயிர்பிழைத்தவர் பேட்டி
திருநெல்வேலி: இயக்குநர் மாரி செல்வராஜின் அக்கா லாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தது எப்படி என்பதை அவருடன் பயணித்த ஊர்க்காரர் ஒருவர் இப்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' திரைப்படம் 1999ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தைப் பார்த்த பலரும் இன்று உணர்வு ரீதியாக அதைக் கொண்டாடி வருகின்றனர். அந்தக் காலத்தில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவர்கள் சிலர் தங்களின் அனுபவத்தைப் பேசி வருகின்றனர். இந்த விபத்தில் 3 பேர்களைக் காப்பாற்றிவிட்டு இறுதியில் பலியான சிறுவன் லட்சுமணன். இவர் மறைந்த பிறகு அண்ணா விருது வீரச்சிறுவன் விருது 2000 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த விபத்தில் முதன்முதலாக உயிர் தப்பியவர் ஒருவர் மாரி செல்வராஜின் சொந்த கிராமமான புளியங்குளத்தில் வாழ்ந்து வருகிறார். அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அன்று என்ன நடந்தது என்பது பற்றி செந்தூர பாண்டியன் அளித்துள்ள பேட்டியில், "இந்த 'வாழை' படத்தில் வரும் லாரி விபத்து சம்பவம் 21.02.1999இல் தான் நடந்தது. அதில் நானும் பயணம் செய்தேன். அப்போது எனக்கு 25 வயது இருக்கும்.
மொத்தம் 19 பேர் இறந்துபோனார்கள். அதில் உயிர் பிழைத்ததில் நானும் ஒரு ஆள். வழக்கமாக காலையில் 8 மணிக்கு லோடு ஏற்ற போவோம். சம்பவம் நடந்த அன்று மொத்தம் 5 லோடு. எனவே சிலர் சுமக்கக் கஷ்டம் எனச் சொல்லிவிட்டு வர மறுத்துவிட்டார்கள். ஆகவே நாட்டார் குளம் ஆட்களையும் அழைத்து வந்தார்கள். நாங்கள் இரண்டு ஆட்களும் சேர்ந்துதான் லாரியில் போனோம்.

வாழைத் தோப்புக்குச் சென்ற பிறகு ஒவ்வொரு வண்டியாகக் கூலியாட்கள் வாழைத் தாரை ஏற்றினார்கள். கடைசி வண்டிக்காரர் வண்டியில் லோடு ஏற்றுவதற்குள் பக்கத்தில் உள்ள சாராயக் கடைக்குப் போய் சரக்கு அடித்து வந்து படுத்துவிட்டார். நாங்கள்தான் அவரைப் போய் எழுப்பினோம். அவர் முகத்தைக் கழுவச் சொல்லிவிட்டு, நிதானம் வந்த பிறகு வண்டியை எடுக்கச் சொன்னோம். அவரும் எடுத்தார். லாரியில் தார் ஏற்றிய பிறகு கூலியாட்கள் 50பேர் மேலே ஏறி உட்கார்ந்து கொண்டோம்.
வண்டிப் போய்க் கொண்டிருந்தபோது நிதானம் தவறி டிரைவர் லாரியை சாலை ஓரமாக இருந்த பள்ளத்தில் இறக்கிவிட்டார். வண்டி கீழே இறங்காமல் தடுக்க உடனடியாக பிரேக் அடித்தார். வந்த வேகத்தில் பிரேக் அடித்ததால் மேலே உட்கார்ந்திருந்த ஆட்கள் எல்லாம் புரண்டு விட்டார்கள். நான் தான் முதலில் எட்டிப் பார்த்தேன். வண்டி பள்ளத்தில் உருள இருந்தது. ஒரு பக்கம் டயர் தூக்கிவிட்டது. உடனே பக்கத்திலிருந்த வயலில் குதித்துவிட்டேன்.

முதல்முறை வண்டி புரண்டபோது ஒன்றும் ஆகவில்லை. இரண்டாவது முறை வண்டி உருண்ட போது ஆட்களை எல்லாம் உள்ளே போட்டு வாழைத் தார் அழுத்திவிட்டது. உள்ளே சிக்கியவர்களின் இடுப்புக்கு வெளியே மட்டும் உடல் தெரிகிறது. வாழைத் தார் சுமை அழுத்துவதால் கால்கள் மட்டும் துடித்தன. நாங்கள் சிலரின் உடலை இழுத்துப் பார்த்தோம். முடியவில்லை. ஒரு உயிரைக் கூட காப்பாற்ற முடியவில்லை. நான் மட்டும் சுதாரித்து வயல்வெளியில் குதிக்காமலிருந்திருந்தால், நானும் இந்தக் கல்லறைக்குள் எப்போதே போய்ச் சேர்ந்திருப்பேன். அதை இந்தப் பகுதியைக் கடக்கும்போது எல்லாம் உணர்ந்திருக்கிறேன்" என்று கண்கலங்குகிறார்.
இந்த விபத்தில் இறந்த பெரும்பாலானவர்கள் இவருக்கு உறவினர்கள்தான். ஆகவே, அதிக வலியை இவருக்கு இந்த விபத்து கொடுத்துள்ளது. அப்போது இறந்தவர்கள் பலருக்கும் 17 முதல் 20 வயதுக்குள்தான் இருக்கும் என்கிறார். மாரி செல்வராஜின் அக்கா முருகம்மாள் இவரின் தம்பியுடன் படித்தவர். அவரும் இந்த விபத்தில் இறந்தவர். அதை வைத்தே மாரி செல்வராஜ் இந்தக் கதையை எழுதி, இயக்கியுள்ளார் இதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் சோ தர்மன் என்ற எழுத்தாளர் இந்தக் கதைக்கு உரிமைக் கொண்டாடி இருக்கிறார்.

"அந்தக் காலத்தில் இன்றைக்கு உள்ளதுபோல போன் வசதி கிடையாது. எனவே உதவிக்கு யாரையும் உடனே அழைக்க முடியவில்லை. விபத்து நடந்த ஊரின் பக்கம் முஸ்லிம் கிராமம். அவர்கள்தான் எங்களை வந்து காப்பாற்றியது. அந்த மக்கள் இல்லை என்றால், மொத்தமாக எல்லாம் போய்ச் சேர்ந்திருப்போம். ஒருவர் சைக்கிள் கொண்டுவந்தார். உடனே வாழைத் தார் சுமை தூக்குவோர் சங்கத்துக்குப் போய் நான் தான் தகவல் சொன்னேன். உள்ளே 20 பேர் மாட்டிக் கொண்டார்கள். லதா என்ற பெண் மட்டும் உயிரோடு உள்ளே தவிக்கிறாள் என்று தகவல் சொன்னேன்" என்று சொல்கிறார்.
இவரது முயற்சியால்தான் பலரும் உதவிக்கு வந்துள்ளனர். இந்த விபத்தில் இறந்த 15 பேருக்கு மேலான உடல்களை ஊரில் ஒரே இடத்தில்தான் அடக்கம் செய்துள்ளனர். அந்தக் கல்லறையில் இந்த விபத்து பற்றிய செய்தியைக் கல்வெட்டி எழுதி உள்ளனர். சிறுவன் லட்சுமணன் கல்லறையில் அவர் வீரச் செயல் புரிந்த வாசகமும் உள்ளது. இந்த ஊர் அல்லாமல் பக்கத்துக் கிராமத்தில் வந்து சுமைத் தூக்கிய சிலரும் உயிரிழந்துள்ளனர். அவர்களின் கல்லறை அங்கே உள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications