தமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு.. பாஜக கனவு ஒருபோதும் நிறைவேறாது.. வைகோ ஆவேசம்!
திருநெல்வேலி: இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது உதவியாளர் சாரதி பிசி. துரையின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்த்து வைகோ கூறுகையில், திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமீபத்தில் போட்டுள்ளார்.
எனவே தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பிறகு பொற்கால ஆட்சி நடத்த முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது. தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரால் கட்டி எழுப்பப்பட்ட திராவிடக் கோட்டையை ஆதிக்க சக்திகள் சக்திகள் சிதைக்க பார்க்கிறார்கள்.

வைகோ விமர்சனம்
இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து தமிழகத்தை கைப்பற்ற நினைக்கும் பாஜகவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. அண்மையில் இந்தூரில் 75 ஆண்டு கால சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற விழாவில் பாஜகவுக்கு பின்னால் இருந்து செயல்படும் சங்பரிவார் அமைப்புகள் ஊர்வலம் நடத்தினார்கள்.

இந்தி, சமஸ்கிருதம்
அந்த ஊர்வலத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகார கொடியவன் கோட்சேவின் உருவத்தை வைத்து "வாழ்க வாழ்க" என முழக்கம் எழுப்பினர். இதைவிட கொடுமை எதுவும் இருக்காது. தமிழகம் உள்பட அனைத்தையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து மாநில உரிமைகளை சிதைக்க முயற்சிக்கின்றனர். எனவே தான் இந்தியாவை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என்று அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன்.

பிரதமர் கெட்டிக்காரர்
அதன் மூலம் இந்துத்துவா சக்தியை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இது ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கோட்டை என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். பிரதமர் மிக சாதுரியமானவர், மகா கெட்டிக்காரர். அவர் இங்கே வந்து திருவள்ளுவரை, பாரதியாரை பேசுகிறார். ஆனால் வடக்கே சென்றார் இந்தியில் தான் பேசுகிறார். அவர் இந்தியையும், இந்துத்துவா சக்தியையும் நிலை நாட்டுவதற்காக செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
தொடர்ந்து தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்த அன்று நான் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என கதறினார்கள். தற்போது ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது ஒரு படுகொலை என்பது இந்த அறிக்கையே சாட்சியமாகும் என்று தெரிவித்துள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications