எல்லா தலைவர்களும் உள்ளே போகப் போறாங்க.. காங். செயற்குழுவை திகாரிலேயே வச்சுக்கலாம்.. சாமி பொளேர்!
நெல்லை: காங்கிரஸ் தலைவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்பதால் செயற்குழு கூட்டத்தை திகார் சிறையில் வைத்துக் கொள்ளலாம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "பொருளாதார மந்த நிலை இருப்பதாக கூறுவது தவறு. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்திலும் பொருளாதார பிரச்சினை இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அதிக ஊழல்தான் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு காரணம். ப.சிதம்பரத்தின் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைவர்கள் சிறைக்கு செல்வார்கள் என்பதால் செயற்குழு கூட்டத்தை திகார் சிறையில் வைத்துக் கொள்ளலாம்.
வெளிநாடுகளில் இருப்பது போன்ற நீர் மேலாண்மையை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும். சவுதி, இஸ்ரேலில் ஆறு, குளம் கிடையாது; ஆனால் அங்கு 24 மணி நேரமும் குழாயில் தண்ணீர் வரும். சவுதி, இஸ்ரேல் போன்று நம் நாட்டிலும் நீர் மேலாண்மையை ஏற்படுத்த வேண்டும் பல ஆண்டுகளாக இது பற்றி நான் பேசியும், எழுதியும் வருகிறேன். நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இருந்தது போன்ற மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.
விவசாயிகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நமது கொள்கையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் பெரிய அளவில் வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும்" என்றார்.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications