தோட்டத்தில் வெண்டைக்காய் பறிக்க போன பெண்.. பின்னாடியே நெல்லை பாஜக பிரமுகர்.. திகுதிகு திருநெல்வேலி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை பாஜக மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. திருநெல்வேலி தோட்டத்தில் என்ன நடந்தது? என்பது குறித்த விரிவான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. யாரிந்த இளம்பெண்?

பழனியில் சமீபத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் மீது பாலியல் புகார் தரப்பட்டது. பழனி அருகே தமிழக அரசின் காலை உணவு திட்டத்தில் வேலை பார்த்த சமையலர் பெண்ணிற்கு, பாஜக மாவட்ட செயலாளர், பாலியல் தொல்லை கொடுத்ததாக, பாதிக்கப்பட்ட பெண் கண்ணீரிருடன் போலீசில் புகார் அளித்திருந்தார்..

tirunelveli nellai

திண்டுக்கல்: சாமிநாதபுரம் கிராமத்தில் அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்ததாக பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது போலீசாரும் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.. இவரது மனைவி செல்வராணி புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்ய வந்துள்ளேன் எனக்கூறி மதுபோதையில் பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். இதற்கு பிறகு, கட்சியின் உறுப்பினராக உள்ள மகுடீஸ்வரனை நீக்குமாறு அண்ணாமலையை கேட்டுக் கொள்கிறேன் என திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கடிதம் எழுதும் அளவுக்கு இந்த விவகாரம் சென்றது திண்டுக்கல்லில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

நெல்லை: இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் நெல்லையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.. நெல்லையில், இளம்பெண்ணுக்கு பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை தந்ததாக புகார் கிளம்பியிருக்கிறது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள தெற்கு கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பாஜக மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக செயல்பட்டு வருகிறார்.. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தன்னுடைய ஊரில் உள்ள தோட்டத்தில் வெண்டைக்காய் பறிப்பதற்காக ராதாபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சென்றிருக்கிறார்..

tirunelveli nellai

வெண்டைக்காய்: அப்போது அங்கு சென்ற செல்வகுமார், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பிச்சென்று, ராதாபுரம் போலீசில் இதுகுறித்து புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில் செல்வகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. ஆனால் செல்வக்குமார் எங்கே என்று தெரியவில்லை.. எனவே அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ராதாபுரம் அருகே தெற்கு கும்பிளம்பாடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்.. 40 வயதாகிறது.. நெல்லை பாஜக தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு தலைவராக உள்ளார்.. இவர் சொந்தமாக வெண்டைக்காய் தோட்டம் வைத்திருக்கிறார்.. இந்த தோட்டத்தில் வெண்டைக்காய் பறிக்கும் வேலையில் பெண்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

பாலியல் தொல்லை: சம்பவத்தன்று, 35 வயது பெண்ணும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளார்.. ஆனால், அன்றைய தினம், வெண்டைக்காய் தோட்டத்தின் ஒரு பகுதியில், அந்த பெண் மட்டும் தனியாக வெண்டைக்காய் பறித்து கொண்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் அங்கு வந்த செல்வகுமார், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. இதற்கு பிறகே அந்த பெண் அலறியடித்து கொண்டு போலீசுக்கு சென்றதாகவும் கூறுகிறார்கள்.

எனவே, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்ய அவரது தோட்டத்துக்கு சென்றிருக்கிறார்கள்.. ஆனால், அதற்குள் செல்வக்குமார் தலைமறைவாகிவிட்டாராம்.. அவரை போலீசார் தேடுகின்றனர். தோட்டத்திற்கு வெண்டைக்காய் பறிக்க சென்ற இளம்பெண்ணுக்கு பாஜக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக நிர்வாகியிடம் விசாரித்தால்தான், பெண் தந்த புகார் குறித்த உண்மை தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+