ஒரே நாளில் எல்லோரையுமே உலுக்கி எடுத்த படம்.. மனிதம் இன்னும் மரணிக்கவில்லை!
நாயின் பாச போராட்டம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Recommended Video
நெல்லை: கல்லையும் கரைக்க முடியுமா.. முடியும் எல்லையில்லாத அன்பு இருந்தால்.. எதுவுமே சாத்தியம்தான்.. இது எல்லா ஜீவராசிகளுக்கும் பொருந்தும். அப்படி ஒரு சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது!
நெல்லை அருகே உள்ள கீழ வீரராகவபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனியார் பஸ் நிறுவன அதிபர் ஒருவரின் வீட்டில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.. அந்த வீட்டிலேயே பாதுகாப்புக்காக ஒரு நாயும் வளர்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வீட்டின் ஓனர் குடும்பத்துடன் வெளியே சென்றுவிடவும் பன்னீர்செல்வம் மட்டும் தனியாக இருந்தார்.. ஆனால் வீட்டின் கேட் அருகிலேயே மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தார்... அவரது தலையில் ரத்தக்காயம் இருந்தது.

பெருமாள்புரம்
இதனை அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அதனால் இந்த நாய்தான் அடித்து கொன்றிருக்க வேண்டும் என்று எண்ணி, பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் சொன்னார்கள்... போலீசாரும் விரைந்து வந்து பன்னீர்செல்வத்தின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் அவர் சடலத்தின் அருகே கிட்ட கூட நெருங்க விடாமல் நாய் தடுத்தது.. பார்க்கவே ரொம்ப ஆக்ரோஷமாக இருந்தது.

போலீசார்
போலீசார், பொதுமக்கள், என யாரையுமே கிட்ட போக விடாமல் குரைத்து கொண்டே இருந்தது. 2 மணி நேரமாக போலீசார் திணறி விட்டனர்... பிறகு வேற வழி தெரியாமல், சுருக்கு கயிற்றை நாயின் கழுத்தில் போட்டு இழுத்தனர்.. ஆனால் எதிர்பாராத விதமாக நாய் இறந்துவிட்டது! இதற்கு பிறகு பன்னீர்செல்வத்தின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சாப்பாடு
அப்போதுதான் பன்னீர்செல்வம் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.. இவ்வளவு அந்த நாய்க்கு சாப்பாடு போட்டது பன்னீர்செல்வம்தானாம்.. அதனால்தான் யாரையும் நெருங்க விடாமல் தடுத்து ஒரு பாச போராட்டத்தையே நடத்திவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்து கலங்கி போய்விட்டனர்.

ஜீவராசி
தன்னை போல காவல் காக்கும் ஜீவன் என்று மதித்து நாய்க்கு பன்னீர்செல்வம் உணவளித்ததை கண்டு நெகிழ்வதா.. எஜமானருக்காக குரைத்து குரைத்து.. உயிரையும் விட்ட நாயை நினைத்து நெகிழ்வதா தெரியவில்லை.. ஆனால்.. இந்த உலகம் இன்னமும் இயங்கி கொண்டிருக்கிறது என்றால், அன்பு என்ற அந்த ஒற்றை சொல் மகிமைதான்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications