திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கழுதைப்பால் ஒரு லிட்டர் ரூ.7000...டிமாண்ட் அதிகம் இருக்கு - என்னென்ன சத்துக்கள் இருக்கு தெரியுமா

பட்டதாரி இளைஞர் தமிழகத்தில் முதல் முறையாக கழுதை பால் பண்ணை தொடங்கியுள்ளார்.மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: படிப்பு வராதவர்களை நீயெல்லாம் கழுதை மேய்க்கத்தான் லாயக்கு என்று திட்டுவார்கள். ஆனால் நன்றாக படித்து பட்டம் வாங்கிய பட்டதாரி இளைஞர்கள் கழுதைப்பாலின் மகத்துவத்தை உணர்ந்து கழுதைப்பால் பண்ணையை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டதாரி இளைஞர்களால் கழுதைப்பால் பண்ணை தொடங்கப்பட்டுள்ளது.

Recommended Video

    நெல்லை: தமிழகத்தில் முதன் முறையாக கழுதைப்பால் பண்ணை: அசத்தும் பட்டதாரி இளைஞர்!

    அழிவு நிலையில் உள்ள இந்த கழுதை இனத்தை பாதுகாத்திட கடந்த 10 ஆண்டுகளில் 62 சதவீதம் உள்ளதாக இந்தியாவில் தற்போது 1,40,000 கழுதைகளும், தமிழகத்தில் 1428 கழுதைகள் மட்டுமே உள்ளது.

    இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்! இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்!

    கழுதை பாலின் மூலம் பல்வேறு மருத்துவ குணம் உள்ளது. இந்த கழுதை பால் தாய் பாலுக்கு நிகராக செயல் படுவதாகவும், மனித எச்சில் உள்ள லைசை சைன் என்ற ரசாயனம் கழுதை பாலில் உள்ளதால் இது ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகிறது.

    கழுதைப்பாலின் மகத்துவம்

    கழுதைப்பாலின் மகத்துவம்

    அழுத பிள்ளைக்கு கழுதைப் பால் கொடு என்ற வழக்குச் சொல்லை இன்றளவும் கிராமங்களில் கேட்க முடியும். அந்தக் காலத்தில் கிராமங்களில் குழந்தைகளுக்கு உடம்புக்கு சரியில்லை என்றால் உடனே சலவைத் தொழில் செய்பவர்களிடம் இருக்கும் கழுதையிடமிருந்து ஒரு சங்கு பால் கறந்து குழந்தைக்குக் கொடுப்பார்கள்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கழுதைப் பால் குடித்தால் கல்லும் கரையும், மஞ்சள்காமாலை, பித்தம், மந்தம், மப்பு, சொரிசிரங்கு, இளைப்பு, ஆஸ்துமா,உள்ளிட்ட நோய்கள் அகன்றுவிடும் என்றும், எந்த நோயும் தீண்டாது என்றும் பெரியவர்கள் சொல்கின்றனர். இன்றைக்கும் வீதிகளில் கழுதைப்பால் விற்பனை செய்ய வருபவர்களிடம் ஒரு சங்கில் கழுதைப்பால் வாங்கி சிறு குழந்தைகளுக்குத் தருகின்றனர். ஒரு சங்கு கழுதைப்பால் ரூ.40 வரை விற்பனையாகிறது.

    கழுதைப்பால் விலை எவ்வளவு

    கழுதைப்பால் விலை எவ்வளவு

    கழுதைப்பாலுக்கு தேவை அதிகம். 50 மில்லி லிட்டர் கழுதைப்பால் ரூ.500 வரை விற்பனையாகிறது. தாய்ப்பாலுக்கு இணையாக சக்தி கொண்ட இந்த கழுதைபாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் கழுதை பாலின் விலை ரூ.7000 முதல் 10ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.

    பட்டதாரி இளைஞர்கள் கழுதைப்பால் பண்ணை

    பட்டதாரி இளைஞர்கள் கழுதைப்பால் பண்ணை

    நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதிக்கு அருகில் உள்ள துலுக்கபட்டி கிராமத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர், தமிழகத்தில் முதல் முறையாக கழுதை பண்ணை தொடங்கியுள்ளார். இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    கழுதைப்பாலுக்கு தேவை அதிகம்

    கழுதைப்பாலுக்கு தேவை அதிகம்

    தாய்ப்பாலுக்கு இணையாக சக்தி கொண்ட இந்த கழுதைபாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் இதனை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் கழுதை பாலின் விலை 7000 விற்கபடுவதால், இந்த தொழில் பெரும் வளர்ச்சி அடையும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

    English summary
    Graduate youths who have graduated have realized the greatness of donkey milk and started donkey milk farm. Donkey milk farm has been started for the first time in Tamil Nadu by graduate youth in Tirunelveli district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X