Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொட்டகையில் ஆடு வளர்க்கணுமா? மாடு, கோழி பண்ணைக்கு 50% மானியம்.. சூப்பர் திட்டத்தால் நெல்லை மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: இந்தியாவில் கால்நடை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.. அதன் ஒருபகுதியாக, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் பிற உள்ளூர் வங்கிகளோடு இணைந்து சிறப்பு திட்டம் ஒன்றை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசும் கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகிறது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பண்ணை அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. இந்த திட்டம் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி (AHIDF) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

Tirunelveli goat farming Nellai

தேசியக் கால்நடை ஆணையத்தின் கீழ், கால்நடை வளர்ப்புக்காக சிறப்பு மானியமும் வழங்கப்படுகிறது. வெள்ளாடு, கோழி, செம்மறியாடு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவன பயிர் சேமிப்பு மற்றும் மேம்படுத்துதல், செம்மறி, வெள்ளாடு இனங்களை மேம்படுத்துதல் மற்றும் தீவன உற்பத்தி ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதலே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.

50 சதவீதம் மானியம் எதற்கு?

இதற்காக கோழி, வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள், பன்றி பண்ணை அமைக்கவும் தீவனம், தீவனப்பயிர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் மொத்த திட்ட செலவில் 50% மானியம் வழங்கப்படுகிறது.. சொந்தமாக அல்லது குத்தகைக்கு நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற முடியும்.

ஆனால், தொழில் முனைவோர் அல்லது தகுதியுள்ள நிறுவனங்கள் திட்டத்திற்கான வங்கி கடன் அனுமதி அல்லது வங்கி உத்தரவாதத்தை பெற வேண்டும். பயனாளிகள் திட்ட மதிப்பீட்டிற்கான அங்கீகாரத்தினையும் பெற வேண்டும். பணிகள் நிறைவு பெறுவதன் அடிப்படையில் மானியம் 2 தவணைகளாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்

இந்நிலையில், தமிழ்நாடு அரசு கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகிறது. அதற்காக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட பண்ணை அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. புதிய கால்நடை பண்ணைகள் அமைக்க ஊக்குவித்து வருகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பண்ணை அமைக்க விருப்பம் உள்ளவர்கள், https://www.trilda.tn.gov.in/ என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும், தொழில்முனைவோர்களை உருவாக்கிடவும், புதிய கால்நடைப் பண்ணைகள் அமைப்பதற்கு 2021-2022 ஆம் நிதி ஆண்டிலிருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில் முனைவோர்களை ஊக்குவித்து வருகின்றது.

நாட்டுக்கோழி பண்ணை

புதிய கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் உருவாக்குவதின்வழி மாநிலத்தின் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிப்பது மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க இலக்காக கொண்டு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் தீவனம், தீவனப்பயிர் சேமிப்பு. தீவன விதைகள் உற்பத்தி, கோழிவளர்ப்பு. செம்மறியாடு வளர்ப்பு. வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில்முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25.00 இலட்சம் வரையும், செம்மறியாடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.50.00 இலட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ.15.00 இலட்சம் முதல் ரூ.30.00 இலட்சம் வரையும் வைக்கோல் ஊறுகாய்ப்புல், மொத்த்த கலப்பு உணவு (TMR) தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

யார் யார் தகுதி பெறுவர்

இத்திட்டத்தில் தனி நபர், சுய உதவி குழுக்கள்(SHG), விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு (FPO), விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள்(JLG), பிரிவு 8 நிறுவனங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்கள் https://nim.uclyamimitra.in/ என்கிற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை https://www.trilda.tn.gov.in/ என்கிற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க அறிக்கையினை விண்ணப்பதாரர்கள் https://www.trilda.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது.

தேவையான விரிவான திட்ட மேலும் விவரங்கள் அறிய அருகிலுள்ள கால்நடை உதவி மருத்துவர்கள். கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களை தொடர்புக் கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+