Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வள்ளியூர் ரயில்வே பாலத்தில் மழைநீரில் சிக்கிய அரசு பேருந்து! எச்சரித்தும் கேட்காத டிரைவர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை வள்ளியூர் அருகே ரயில்வே பாலத்தில் சிக்கிய அரசு பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் கடந்க மே 4 ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த 25 நாட்களில் கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கும். ஆனால் இந்த அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே மக்களை பதம் பார்த்துவிட்டது.

Government bus driver suspended as he run the bus in 4 feet rain water in Valliyur

கடந்த மார்ச் மாதம் முதலே அதிக வெயிலால் மக்கள் அவதியடைந்தனர். பெரும்பாலான மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி எடுத்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய போது பகல் நேரத்தில் வெப்பநிலை 106 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், அணை பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலில் வாடிய இடங்கள் எல்லாம் கோடை மழையால் குளிர்ந்தன. நேற்று நிலவரப்படி காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பதிவானது.

அதன்படி மூலைக்கரைப்பட்டி- 32, பாளையங்கோட்டை- 20, நாங்குநேரி- 3, திருநெல்வேலி- 5.20, கொடுமுடியாறு அணை- 9, நம்பியாறு அணை- 21, காக்காச்சி- 1 என மொத்தம் 91.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 51 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 34.47 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 254 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர் மட்டம் 86.22 அடியாக இருந்தது.

நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று பிற்பகலில் இடி, மின்னலுடன் பலத்த கோடை மழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக கோடை மழை கொட்டி தீர்த்த நிலையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நெல்லை சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி, வண்ணாரபேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம், முருகன் குறிச்சியிலிருந்து வண்ணாரபேட்டை செல்லும் சாலையோரம் பாளையங்கோட்டை வ.உசி. மைதானம் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பாளையங்கோட்டை மத்திய சிறைச் சாலை முன்புள்ள சந்திப்பில் மழைநீருடன் பாதாள சாக்கடையும் கலந்து தேங்கியதால் துர்நாற்றம் வீசியது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்துக்கு அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை எச்சரிக்கையும், வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படியும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரு அரசு பஸ் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது.

அது வள்ளியூர்- ராதாபுரம் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் வந்த போது அங்கிருந்த பொதுமக்கள், "போவாது, வண்டி போவாது" என்றனர். 4 அடிக்கு தண்ணீர் தேங்கியதாகவும் கூறினர். ஆனால் டிரைவரோ டயர் அளவுக்குத்தான் இருக்கும் என்றார். அதற்கு அந்த நபர், சொல்றது சொல்லிட்டேன், உங்கள் இஷ்டம் என்றார்.

இதையடுத்து நிறைய பேர் சொல்லியும் அந்த டிரைவர் கேட்கவில்லை. இதையடுத்து கொஞ்சம் தூரம் சென்றதுமே பேருந்து மழை நீரில் சிக்கியது. 4 அடி தண்ணீரில் சிக்கிய போது அங்கிருந்தவர்கள், அவ்வளவுதான் போகாது என்றனர். இதனால் பேருந்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அச்சமடைந்தனர்.

தகவலறிந்த தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு வந்து பேருந்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த நிலையில் பொதுமக்கள் டிரைவரை எச்சரித்த வீடியோ வைரலானது. இதையடுத்து அந்த பேருந்தை இயக்கிய அரசு பேருந்து ஓட்டுநர் ரவிசந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை நாகர்கோவில் கோட்ட மேலாளர் பிறப்பித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+