Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊர் மக்களுக்கு ஒன்று என்றதும்.. துடிதுடித்த இருட்டுக்கடை.. வெள்ளத்திற்கு இடையே.. சூப்பர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லையில் கனமழை பெய்து வரும் நிலையில் இருட்டுக்கடை அல்வா சார்பில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை தூத்துக்குடியில் இயல்பை விட 68%மும், திருநெல்வேலியில் 135%மும், கன்னியாகுமரியில் 103%மும், தென்காசியில் 80%மும் கூடுதலாக பதிவாகியுள்ளது.

தொடர் கனமழை காரணமாக பாபநாசம் அருகேயுள்ள அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. அருவி பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Iruttu Kadai Halwa shop helps people in Thirunelveli amid the heavy rain and flood

வரலாறு காணாத மழையால் எல்லீங்க நாயக்கன்பட்டி - செங்கோட்டை கிராமங்களுக்கு இடையிலான தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் விருதுநகரில் விடிய விடிய பெய்த கனமழையால் சதுரகிரியின் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

வெள்ளம்: தூத்துக்குடி, நெல்லையில் வீடுகளுக்குள் வெள்ளம் சென்றுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மழையுடன் காற்றும் வேகமாக வீசுவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. நகரம் முழுவதும் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

( இது வேற லெவல்.. எப்படி இப்படி யோசிக்கிறாங்க? நெல்லை கலெக்டர் எடுத்த முடிவு.. குவியும் பாராட்டு)

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவுக்கு சூழ்ந்த மழைநீர் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

நிவாரணம்: நெல்லையில் கனமழை பெய்து வரும் நிலையில் இருட்டுக்கடை அல்வா சார்பில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளம் முடிந்து 3 நாட்கள் கழித்து போர்வை வழங்காமல்.. உடனுக்குடன் மக்களுக்கு தேவையான பொருட்களை அந்த நிறுவனம் வழங்கி உள்ளது.

பொதுவாக தமிழ்நாட்டு நிறுவனங்கள் பல இப்படி உதவுவது வழக்கம். பன்னாட்டு நிறுவனங்கள் நம்ம ஊரில் கடை போட்டாலும் அவர்களுக்கு மக்களின் பாதிப்புகள் தெரியாது. உள்ளூர் நிறுவனங்கள்தான் மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் உடனுக்குடன் உதவிகளை செய்யும். அந்த வகையில்தான் இருட்டுக்கடை நிறுவனமும் தன்னை வளர்த்துவிட்ட நெல்லைக்கு ஒன்று என்றதும் உதவிகளை செய்ய தொடங்கி உள்ளது.

இருட்டுக்கடை அல்வா கதை: இந்தியாவில் பெரிய பிஸ்னஸ் மாடல்கள் இல்லாத காலம். சரியாக சொல்ல வேண்டும் என்றால், சுதந்திர போராட்டம் தீவிரம் அடைந்த 1940 களில் இந்தியாவில் ஒருவர் சிறிய கடை தொடங்கவே கூட அதிகம் யோசித்த காலம் அது. அப்போது பெயரே இல்லாமல் திருநெல்வேலியில் தொடங்கப்பட்ட இருட்டான கடைதான் இருட்டு கடை.

கடையில் விளக்கு இன்றி, மாலை நேரத்தில் மட்டும் வியாபாரம் நடந்ததால், இருட்டு கடை என்று செல்லமாக அழைக்கப்பட்டு நாளடைவில் அதுவே அந்த கடைக்கு பெயரானது. இந்த கடையின் பெயரும், அதன் பின்னணியும், வரலாறும் வியக்க வைக்க கூடிய ஒன்று.

Iruttu Kadai Halwa shop helps people in Thirunelveli amid the heavy rain and flood

எப்போது தொடங்கப்பட்டது: 1940களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் துவங்கப்பட்டது இந்த கடை. இப்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த கடை முதலில் கடையாகவே தொடக்கப்படவில்லை. ஆம் இந்த திருநெல்வேலி அல்வா என்பதன் பூர்வீகமே ராஜஸ்தான். ராஜஸ்தானில் இருந்து திருநெல்வேலி ஜமீன்தாருக்கு சமைக்க வந்தவர்கள் உருவாக்கியதுதான் இந்த அல்வா

அங்கிருந்த ராஜ்புத்ராஸ் மக்களின் உணவில் கவரப்பட்ட திருநெல்வேலி ஜமீன்தார், அங்கிருந்து சில சமையல்காரர்களை தமிழகம் வர வைத்தார். அவர்கள் இங்கு வந்து ஜமீனுக்கு உணவு சமைத்து கொடுத்தனர். அப்படி அவர்கள் திருநெல்வேலி கொண்டு வரப்பட்டதுதான் ராஜஸ்தானில் பிரபலமாக இருந்த அல்வா . தொடக்கத்தில் இவர்கள் வீடு வீடாக இந்த அல்வாவை விற்று வந்தனர்.

அதன்பின் மக்களுக்கு அந்த அல்வா பிடித்து போகவே மொத்தமாக கடை தொடங்க அவர்கள் விரும்பினார்கள். இதை தொடர்ந்து 1940ல் பிஜிலி சிங் திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா கடையை தொடங்கினார். அப்போது தொடங்கிய பயணம் இப்போதும் நீடிக்கிறது. இந்த கடை தொடங்கப்பட்ட போதே சில மணி நேரங்கள் மட்டும்தான் மாலையில் இயங்கியது. ஒரு பெரிய காண்டா விளக்கு மட்டுமே இருந்தது . தாமிரபரணி தண்ணீரில் மட்டுமே இந்த அல்வா உருவாக்கப்பட்டது . இப்போதே அதே தண்ணீரில் மூழ்கி உள்ள நெல்லைக்கு உதவியாக இருட்டுக்கடை களமிறங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+