மன நிலை சரியில்லாத மாரியம்மாள்.. 2 குழந்தைகள் கொலை.. தானும் தூக்கில் தொங்கிய பரிதாபம்
2 குழந்தைகளை கொன்ற தாய் தற்கொலை செய்து கொண்டார்
நெல்லை: 2 குழந்தைகளையும் கொலை செய்து மாரியம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை கேடிசி நகர் அருகில் வசித்து வருபவர் மைக்கேல். இவருடைய மனைவிதான் மாரியம்மாள். சக்தி அனுசுயா என்ற 5வயது மகளும், துரைசிங் என்ற 4 வயது மகனும் இந்த தம்பதிக்கு உள்ளனர்.

மாரியம்மாள் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. அதனால் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில நாட்கள் அவர் மாத்திரை சாப்பிடவில்லை என்றால் மனநிலை பாதிப்பு அதிகமாகி கணவருடன் அதிகமாக சண்டை போடுவாராம்.
இந்த நிலையில் நேற்றிரவு மாரியம்மாள் திடீரென்று தன்னுடைய 2 குழந்தைகளையும் தலைகாணியை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சக்தி அனுசுயா நிகழ்விடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டாள். மகன் துரைசிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டும், பலனின்றி இறந்துவிட்டான்.
இதனிடையே இரு குழந்தைகளும் இறந்து விட்டனர் என்று நினைத்த மாரியம்மாள், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விரைந்து வந்த பாளையங்கோட்டை போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போதுதான், மாரியம்மாளுக்கு ஒரு வயதில் அனாலிகா பிரகாஷினி என்ற பெண் குழந்தை இருந்துள்ளது என்றும், அந்த குழந்தையை 6 மாசத்துக்கு முன்பு எறும்பு பவுடர் கலந்த உணவை ஊட்டியும், துணியால் முகத்தை அழுத்தி கொன்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. மைக்கேலும், சொந்தக்காரர்களுக்கு, குழந்தை இயற்கையாக இறந்துவிட்டது என்று நினைத்து அடக்கமும் செய்துள்ளனர்.
மாரியம்மாளுக்கு மனநலன் பாதித்ததால் இப்படி கொலைகளை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஆனால் 3 பேரின் உடல்களை கண்டு மைக்கேல் கதறியது அங்கிருந்த அனைவரையும் கலங்க செய்துவிட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications