தென்காசி... எங்கப்பா வேட்பாளர்களைக் காணோம்.. நாம் தமிழர் மட்டுமே மனு தாக்கல்!
Recommended Video

தென்காசி: தென்காசி தனி தொகுதியில் இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் மனு தாக்கல் செய்தார். முக்கிய கட்சிகளைக் காணவில்லை.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இதேபோன்று திமுக ,காங்கிரஸ் கூட்டணியில் திமுக வேட்பாளர் தனுஷ் குமார் போட்டியிடுகின்றார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொன்னுத்தாய் என்பவர் போட்டியிடுகிறார். மூன்று பேரும் இன்று வரை வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இந்த நிலையில் தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் சிவகிரியை சேர்ந்த மதிவாணன் என்பவர் இன்று மதியம் 2.30மணிக்கு தென்காசி கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான சவுந்தரராஜனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தென்காசியில் இதுவரை ஒரே ஒரு வேட்பாளர்மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் அதுவும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications