பெண்கள் தினத்தன்று நெல்லை பெண்ணுக்கு சிறந்த பெண் தொழில்முனைவோருக்கான விருது!
பெண்களை கொண்டு நடத்தப்படும் இயற்கை அங்காடிக்கு எச்சிஎல் பவுண்டேஷன் சார்பில் விருது
நெல்லை: நெல்லையில் மகாராஜ நகரில் பெண்களை கொண்டு நடத்தப்படும் நன்செய் இயற்கை அங்காடிக்கு எச்சிஎல் பவுண்டேசன் சார்பில் இந்த ஆண்டிற்கான சிறந்த பெண் தொழில்முனைவோர் விருது வழங்கப்பட்டுள்ளது.
எச்சிஎல் பவுண்டேசன், மதுரையில் உள்ள தியாராஜா ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட், மற்றும் அகமதாபாதில் உள்ள அண்ட்ரபிரனர்ஷிப் டெவலப்மெண்ட் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா இணைந்து பெண்கள் தினத்தை முன்னிட்டு நடத்திய விழாவில் பெண்களுக்கு சக்தி அவார்ட்ஸ் விருது கொடுக்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு மூலம் பயிற்சி மற்றும் கடன் உதவி பெறுவது தொடர்பான விளக்கங்களை எம்எஸ்எம்இ உதவி இயக்குநர் உமா சந்திரிகா எடுத்துரைத்தார். தொழில் விரிவாக்க மானியங்கள், உள்நாடு மற்றும் சர்வதேச கண்காட்சிகளில் பங்கு பெற அரசின் நிதி உதவி ஆகியவற்றை குறித்து பேசினார்.
இன்றைய சூழ்நிலையில் பெண் தொழில் முனைவோர் சந்திக்கும் சாவல்களும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் விருது பெற்ற நன்செய் இயக்குநர் சத்தியா தேவர்பிரான் பேசியதாவது: இது போன்ற விருதுகள் எங்களை போன்ற இயற்கை அங்காடி நடத்தும் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
இந்த விருதினை இயற்கை விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கிறேன். சவால்கள் இல்லாத துறையே இல்லை. அதிலும் எங்களை போன்ற பெண்களுக்கு சவால்களே வாழ்க்கையாக உள்ளன. இருப்பினும், வெற்றி பெற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டால் கரடு முரடான பாதைகள் கூட வெற்றிப் படிகட்டுகளாக மாறும் என்றார். நிகழ்ச்சியை இடிஐஐ சார்ந்த கவிதா ஒருங்கிணைத்திருந்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications