தமிழகத்தில் இனி திமுகவே இருக்காது.. அந்க கட்சிக்கு மாற்றாக அண்ணாமலை வந்துவிட்டாரே.. பிரதமர் மோடி
நெல்லை: தமிழகத்தில் இனி திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் இருக்காது. ஏனென்றால் தமிழகத்தில் அண்ணாமலை வந்துவிட்டாரே என பிரமதர் நரேந்திர மோடி பேசினார்.
தூத்துக்குடி, நெல்லை நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி பல்லடம் அருகே மாதப்பூரில் நடைபெற்ற தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இன்று தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். பாம்பனில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில்வே தூக்குப் பாலத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து நெல்லையில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில் நெல்லையப்பருக்கும் காந்திமதியம்மாளுக்கும் என் வணக்கங்களையும் நமஸ்காரங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாட்டுக்காக உழைத்து நல்லாட்சியை தர மீண்டும் வாய்ப்பு தர வேண்டும். நெல்லை மக்கள் திருநெல்வேலி அல்வாவை போல் இனிமையாகவும் இளகிய மனதோடும் இருக்கிறார்கள்.
தமிழகத்தின் அனைத்து மக்களும் பாஜகவின் பக்கம் நிற்பதை நான் பார்க்கிறேன். பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது. நேற்று திருப்பூர், மதுரை சென்றிருந்தேன். இன்று நெல்லைக்கு வந்துள்ளேன். இங்கு தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது இந்த மோடியின் உத்தரவாதமாக இருக்கும்.
தோளோடு தோள் நின்று நடை போடுபவர்கள்தான் தமிழர்கள். பாஜக தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக் கூடிய கட்சி ஆகும். மாற்று எரிசக்தி துறையில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. நாடு ஒரு புதிய எண்ணத்தோடு பணியாற்றி வருகிறது. இதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும்.
உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கியுள்ளனர். பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் வழங்கப்பட்டது. இன்று 1 கோடி இணைப்பு உள்ளது. இன்று தமிழகத்தில் 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது.
திமுகவும், காங்கிரஸும் அப்புறப்படுத்தப்பட வேண்டிய கட்சிகள். திமுகவை இனி தேடினாலும் கிடைக்காது. தமிழகத்தில் அண்ணாமலை வந்துவிட்டதால் இனி திமுக காணாமல் போகும். தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அண்ணாமலைதான். எம்ஜிஆர் போன்ற தலைவர்கள் வளர்ச்சிக்கான பாதையை வகுத்தார்கள். ஆனால் தங்கள் வாரிசுகளை முன்னிலைப்படுத்துவதையே சிலர் நோக்கமாக கொண்டிருந்தார்கள்.
தமிழகத்தில் இருந்தே திமுக அகற்றப்பட வேண்டிய கட்சி. தென்னிந்திய மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பாஜகவுக்கு நன்றாக தெரியும். இந்தி, தமிழ் என பேசுகிறார்கள். இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து முருகனை எம்பி ஆக்கியுள்ளோம். தமிழகத்தை சேர்ந்த பட்டியலின சமூகத்தவரை அமைச்சராக்கியுள்ளோம்.
நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றம் இந்தியாவில் ஏற்பட்டு வருகிறது. இந்தியா 100 மடங்கு முன்னேறினால் தமிழ்நாடும் 100 மடங்கு முன்னேற வேண்டும். உங்கள் வரியைத்தான் நாங்கள் உங்களுக்கு திட்டங்களாக வழங்குகிறோம். திமுக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள்.
தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியிலேயே திமுகவினர் குறியாக இருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்ய போகிறார்கள் என திமுகவிடம் கேட்டால் பதில் இருக்காது. வாரிசுகளுக்காக அவர்கள் இருக்கிறார்கள். உங்களுக்காக நான் இருக்கிறேன். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி திமுகவும் காங்கிரஸும் சம்பாதிக்க நினைக்கிறார்கள். சுயநலமிக்கவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications