Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய பல்பீர் சிங் மீண்டும் வேண்டும்.. கட் அவுட் வைத்து கோவிலில் வழிபடும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: குற்றச்சம்பவங்களை ஒடுக்கி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய காவல்துறை அதிகாரியான பல்பீர்சிங்கிற்கு தண்டனை கொடுப்பதா என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பல்பீர் சிங்கை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் எனவும் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர் துலுக்கப்பட்டி கிராம மக்கள். கஞ்சா வியாபாரிகளை கைது செய்தும், போதை பொருள் நடமாட்டத்தை ஒழித்தும் பலராலும் பாராட்டப்பெற்ற பல்பீர்சிங்கிற்கு கிராம மக்கள் கட் அவுட் வைத்தும் கோவில்களில் புகைப்படத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி பல்பீர் சிங். அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரது பற்களை பிடுங்கி குரூரமாக சித்திரவதை செய்வதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான விசாரணை அதிகாரியாக சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமதுசபீர் ஆலமை நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏஎஸ்பி பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். பல்பீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டார்.

சட்டசபையில் அறிவிப்பு

சட்டசபையில் அறிவிப்பு

இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், விரும்பத்தகாத சம்பவத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

ஊடகங்களில் இந்த விவகாரம் வெளியாகவே அந்த செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. புகார் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐஜி ஆறு வாரத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணைய தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கி முத்து, சுபாஷ், வேத நாராயணன் உள்ளிட்ட 5 பேர் வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணைய தலைவர் முன் வெள்ளிக்கிழமை ஆஜராகினர். இவர்களிடம் எஸ்பி, மகேஸ்வரன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு ஆஜரான 5 பேரிடம், பல் உடைப்பு சம்பவம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.

பல்பீர் சிங் ஆஜராக சம்மன்

பல்பீர் சிங் ஆஜராக சம்மன்

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து ஏஎஸ்பி பல்வீர் சிங் வரும் ஏப்ரல் 3ம் தேதி மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தபடி பல்பீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து தென் மண்டல ஐஜி ஆஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

கட் அவுட் வைத்து முதல்வருக்கு வேண்டுகோள்

கட் அவுட் வைத்து முதல்வருக்கு வேண்டுகோள்

இந்த நிலையில் பல்பீர் சிங்கிற்கு ஆதரவாக கிராம மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். பல்பீர் சிங்கை மீண்டும் பணியில் அமர்த்தி சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் எனவும் முதல்வருக்கு ஓடைக்கரை துலுக்கப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆபரேசன் கஞ்சா வேட்டை நடந்த போது அம்பாசமுத்திரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பிடித்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தினார். பல்பீர் சிங் பதவியேற்ற பின்னர் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோவிலில் வழிபாடு

கோவிலில் வழிபாடு

பல் உடைக்கப்பட்ட விவகாரத்தில் பல்பீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னர் அவருக்கு மீண்டும் பணி கிடைக்க வேண்டும் என கிராம மக்கள் கோவில்களில் சாமி சிலையின் பாதங்களில் பல்பீர் சிங்கின் புகைப்படத்தை வைத்து வழிபட்டு வருகின்றனர். பல்பீர் சிங் வந்த பிறகு குற்றவாளிகள் அச்சத்துடன் உள்ளனர். மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். குற்றவழக்குகள் குறைந்து விட்டதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். 200 சிசிடிவி மாட்டி பாதுகாப்பான நகரமாக மாற்றினார்.அனைவரையும் மரியாதையாக நடத்துவார் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். கொலைகள் குறைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர் கிராம மக்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+