நெல்லை, தூத்துக்குடி, தென்காசி.. 3 மாவட்டங்களில் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி.. எம்எல்ஏ கவலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை:சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு ஊராட்சிகள் நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இங்குள்ள மக்களின் அடிப்படை பிரச்சனைகளை செய்து கொடுப்பதற்கு மூன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அலையும் நிலை இருக்கிறது. உள்ளாட்சி தொகுதி மறு வரை செய்யும்போது பல மாவட்டங்களில் உள்ள சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை ஒரே பகுதியாக மாற்ற வேண்டும் என சங்கரன்கோவில் அதிமுக எம்எல்ஏ திலீபன் ஜெயசங்கர் பேட்டி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளை நேரில் சந்தித்து, சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிரச்சினைகள் குறித்துச் சங்கரன்கோவில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திலீபன் ஜெய்சங்கர் கோரிக்கை மனு அளித்தார்.

Sankarankovil Split in Tirunelveli Tuticorin Tenkasi AIADMK MLA Wants tenkasi District

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், "சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மானூர் ஊராட்சி ஒன்றியத்தின் வன்னிகோனேந்தல் பிர்கா, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. அந்தப் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்ய வேண்டியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.

தேவர்குளம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ₹1.40 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், தனிநபர் தொடர்ந்த வழக்கால் முடங்கியுள்ளது. அந்தக் கட்டிடத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் 9 ஊராட்சிகள் திருநெல்வேலி மாவட்டத்திலும், 12 ஊராட்சிகள் தூத்துக்குடி மாவட்டத்திலும் உள்ளன. இதனால் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்களையும் சந்தித்துக் கோரிக்கை வைத்தால் மட்டுமே எங்களது மக்களுக்குத் தேவையான பணிகள் நடைபெறும் நிலை உள்ளது. இதன் காரணமாகப் பல கிலோமீட்டர் தூரம் அலைந்து திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இளவரசனேந்தல் பிர்கா தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. அதனை ஒரே மாவட்டத்துடன் இணைத்தால் மட்டுமே மக்களுக்கான அடிப்படை வசதிகள் தடங்கலின்றி கிடைக்கும். எனவே, உள்ளாட்சித் தேர்தல் தொகுதி மறுசீரமைப்பின்போது இதனை மாற்றியமைக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

தமிழக சட்டமன்றத்திற்கு முதன்முறையாகச் சென்றுள்ளேன். சட்டமன்ற நிகழ்வுகள் நன்றாகவே சென்றன. இனிவரும் காலங்களில் வெறும் சண்டை மற்றும் காரசார விவாதங்கள் மட்டுமன்றி, மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்கும் கூடுதல் வாய்ப்புகள் வழங்கினால் நன்றாக இருக்கும். முதல்முறையாகச் சென்றிருந்தாலும் எனக்குப் பேசுவதற்கு அதிக வாய்ப்பு கிடைத்தது. சட்டமன்றம் தேவையற்ற சண்டைகளுக்குள் செல்லாமல், மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி இயங்கினால் சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+