நெல்லை இருட்டுக் கடை யாருக்கு சொந்தம்! 3ஆவதாக வந்த பிரேம் ஆனந்த்! யார் இவர்?! தொடரும் சர்ச்சை!
நெல்லை: இருட்டுக் கடை தனக்குத்தான் சொந்தம் என மூன்றாவதாக பிரேம் ஆனந்த் சிங் என்பவர் உரிமை கொண்டாடி நாளிதழ்களில் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே கவிதா சிங்- நயன் சிங் இடையே பிரச்சினை வலுத்து வந்த நிலையில் மூன்றாவது நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இருட்டுக் கடை அல்வா கடையை உருவாக்கிய ராம் சிங் என்பவரின் மூத்த மகனான உதய் சிங் என்பவரின் மகன் வழிப்பேரன் பிரேம் சிங், ஆண் வாரிசான எனக்கே கடையில் உரிமை உள்ளது.
இருட்டுக் கடை அல்வா கடையை பராமரித்து வரும் கவிதா சிங், அவருடைய சகோதரர் நயன்சிங்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பிரேம் ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி அல்வா என்றாலே இருட்டுக் கடைதான் பலருக்கும் நினைவுக்கு வரும். இதன் உரிமையாளர் கவிதா சிங். இவருடைய மகள் கனிஷ்கா. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கோவையைச் சேர்ந்த பலராம் சிங் எனும் தொழிலதிபருடன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு திருமணமான 40 நாட்களிலேயே இருட்டுக் கடையை எழுதி வாங்கி வருமாறு கனிஷ்காவுக்கு பல்ராம், அவரது தந்தை ஆகியோர் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் வரதட்சணையும் கூடுதலாக கேட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் கவிதா சிங்கின் குற்றச்சாட்டுகளை பல்ராம் சிங் மறுத்துள்ளார். தாங்கள் வரதட்சிணையே வாங்காமல் திருமணம் செய்து கொண்டதாக சொன்னார். இந்த நிலையில் இருட்டுக் கடைக்கு உரிமை கொண்டாடி கவிதா சிங்கின் அண்ணன் நயன் சிங் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பொது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இருட்டுக் கடையை உருவாக்கிய கிருஷ்ண சிங் மறைவுக்கு பிறகு அவரது மகன் பிஜிலி சிங் இருட்டுக் கடையை நடத்தி வந்தார். அவரது மறைவுக்கு பிறகு, அவரது மனைவி சுலோச்சனா பாய்க்கு கடையின் உரிமை சேர வேண்டும் என 1999ஆம் ஆண்டு சட்டப்படி உயில் எழுதி வைத்துள்ளார் பிஜிலி சிங்.
இந்த நிலையில் பிஜிலி சிங் மனைவி சுலோச்சன பாய் மறைவுக்கு பிறகு நேரடி வாரிசு இல்லாததால் அவருடைய சகோதரர் ஜெய்ராம் சிங்கிற்கு சேர வேண்டும் என உயில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்து கவிதா சிங் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நயன்சிங், போலியான உயிலை வைத்துக் கொண்டு இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி செய்கிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் கவிதா சிங் இருட்டுக் கடையை நிர்வகித்து வருகிறார். சுலோச்சனா பாய் உயிரோடு இருக்கும் வரை நயன்சிங் எந்த சொத்துக்களுக்கும் உரிமை கோரியது இல்லை. 2020 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்த பிறகு சொத்துக்கள் பிரிக்கப்படாமல் உள்ளன என பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications