பன்றி பண்ணையில் நுழைந்த 32 வயது பெண்.. திருநெல்வேலியில் 17 வயசு சிறுவனுக்காக எடுக்கப்பட்ட வாடகை வீடு
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது. ஒருபக்கம் பிள்ளைகளுக்கு கல்வியை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இதுபோன்ற புகார்களில் சிக்கி அதிர்ச்சியை தருகிறார்கள்.. இன்னொருபக்கம், பெண்களே சில சமயம் போக்சோ சட்டத்தில் கைதாகி, அதற்கு மேல் அதிர்ச்சியை தந்துவிடுகிறார்கள். அப்படித்தான் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண் செய்த சம்பவம், அவரது குடும்பத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது.. இதுகுறித்த விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது வாகைகுளம்.. இங்கு வசித்து வருகிறார் காளீஸ்வரி.. இவருக்கு 32 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகிவிட்டது.. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் இருக்கிறார்..

பெண்ணின் கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.. எனவே, தன்னுடைய மகனுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார் காளீஸ்வரி.. எந்நேரமும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பாராம் காளீஸ்வரி.. குறிப்பாக, இன்ஸ்டாகிராமிலேயே மூழ்கியிருந்துள்ளார்..
இன்ஸ்டாகிராமில் செலவு
அந்தவகையில் 17 வயது சிறுவன் ஒருவருடன் காளீஸ்வரிக்கு இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டுள்ளது.. பிறகு ஒருவருக்கொருவர் செல்போன் நம்பர்களை மாற்றிக் கொண்டு, போனில் பேசி வந்துள்ளனர்.. களக்காடு அருகே உள்ள தேவநல்லூரில் உள்ள பன்றி பண்ணையில் இந்த 17 வயது சிறுவன் வேலை பார்த்து வருகிறாராம்..
பள்ளிப்படிப்பை மட்டும் முடித்துவிட்டு, மேற்படிப்பை தொடராமல், இந்த பன்றி பண்ணையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.. பன்றி பண்ணையில் வேலை முடிந்ததுமே, காளீஸ்வரியுடன் போனில் பேச ஆரம்பித்துவிடுவாராம்..
ஆபாச பதிவுகள்
இந்த சிறுவன் எப்போதுமே, இன்ஸ்டாவில் ஆபாச பதிவுகளை பதிவிடுவதே வழக்கமாம்.. இந்த பதிவுகளை காளீஸ்வரி ரசித்துள்ளார்.. இதுதொடர்பாக கமெண்ட்களை பதிவிட்டு வரும்போதுதான், சிறுவனின் செல்போன் நம்பரை வாங்கி பேச ஆரம்பித்துள்ளார். இப்படியே ஒரு வருடமாக இருவரும் பேசி வந்துள்ளனர்..
ஒருகட்டத்தில் சிறுவன் பேச பேச, அவனது பேச்சில் காளீஸ்வரி விழுந்ததுடன், ஒருகட்டத்தில் சிறுவனையே தன்வசப்படுத்த முடிவு செய்தார்.. இதற்காக பன்றி பண்ணையில் யாருமில்லாத நேரத்தில் சிறுவனுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது...
பன்றி பண்ணையில் யாரும் இல்லை என்றால், உடனே மெசேஜ் அனுப்ப சொல்வாராம் காளீஸ்வரி.. அந்தவகையில், பன்றி பண்ணைக்கு அடிக்க சென்று வந்துள்ளார் காளீஸ்வரி..
வாடகை வீட்டில் காளீஸ்வரி
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு களக்காடு கோவில்பத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சிறுவனையும் அங்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார் காளிஸ்வரி.. கணவர் வெளியூரில் இருந்ததால் காளீஸ்வரிக்கு இவை யாவையும் சுதந்திரமாக செய்ய முடிந்தது. ஆனால், அந்த பகுதி மக்கள் இதை கவனித்துவிட்டு, காளீஸ்வரியின் கணவருக்கு தகவல் தந்துள்ளனர்.
உடனே கணவரும், சிறுவனுக்கு போன் செய்துள்ளார்.. அதற்கு சிறுவன், நாங்கள் 2 பேரும் சேர்ந்து வாழ போகிறோம்.. எங்களை தொந்தரவு செய்தால் உங்கள் மகனை கொலை செய்துவிடுவோம் என்று கூறியுள்ளார். இந்த விஷயம் சிறுவனின் அம்மாவுக்கு தெரியவந்தது.. உடனே அவர் நாங்குநேரி மகளிர் போலீசில் சென்று புகார் செய்தார்.
தலைமறைவு காளீஸ்வரி
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.. காளீஸ்வரியை போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.. ஆனால் அதற்குள் காளீஸ்வரி தலைமறைவாகிவிட்டதால், அவரை வலைவீசி தேடி கண்டுபிடித்து நேற்று கைது செய்துவிட்டனர்.. அவரது குழந்தையையும், காளீஸ்வரியின் கணவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இப்போது கொக்கிரகுளம் ஜெயிலில் உள்ளார் காளீஸ்வரி.. 32 வயது பெண், கணவன், குழந்தைகளை மறந்து, 17 வயது சிறுவனுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை நெல்லையில் ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications